Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தட்சிணாமூர்த்திக்கு நெற்றிக்கண்! அதிசயம் நிகழ்த்தும் லிலோட்டா நாதர்! அதிசயம் நிகழ்த்தும் லிலோட்டா நாதர்!
முதல் பக்கம் » துளிகள்
குருவால் பிரச்னையா பக்தியுடன் பாடுங்க! பலன் பெறுங்க!
எழுத்தின் அளவு:
குருவால் பிரச்னையா பக்தியுடன் பாடுங்க! பலன் பெறுங்க!

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
03:07

குருவால் உண்டாகும் பிரச்னைகள் அடியோடு நீங்குவதோடு சுபபலன் அதிகரிக்க தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். அவருக்குரிய பாடல்கள் இதோ!

அருந்தவ மாமுனிவர்க்கு
அருளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தறமே புரிதற்கு
இயல்பாகிய தென்னை கொலாம்
குருந்தயலே குரவம்
அரவின் எயிறேற் றரும்பச்
செருந்தி செம்பொன் மலரும்
திருநாகேச் சரத்தரனே.

அல்லாய்ப் பகலாய் அருவாய்
உருவாய் ஆராவமுதாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய்
காண அருளென்று
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள்
பரவ வெளிப்பட்டுச் செல்வாய்
மதில் தில்லைக் கருளித்
தேவன் ஆடுமே.

விரைந்தன்று நால்வருக்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்த கல்லால் நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை யோராப் பழிமொழியாளர்
உரந்தன்மை யாக ஒருங்கி நின்றார்களே.

ஆலநிழல் கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுது செய்வதாடுதீ ஆலம்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.

மாமறையும் ஆகமமும்
மற்றுமுள கலையனைத்தும்
தோமற நன்குணர்ந்தார்கள்
நால்வர்களும் தொழுது அமரக்
காமரு மெய்ப் பொரள் விளங்க
கைவிரலால் தெரித்தருளி
ஏமமிகு கல்லாலின்
வதிபவர்தாள் இறைஞ்சிடுவாம்.

ஆலின்கீழ் நால்வர்க்கு அன்று
அறமுரைத்த அங்கணனை
நுõலின்கண் பொருள் பாடி
நுõலறிவார்க்கு ஈந்தானைக்
காலம்பெற்று இனிதிறைஞ்சிக்
கைதொழுது புறம் போந்தார்
சீலங்கொள் தென்னவனும்
தேவியரும் உடன் போந்தார்.
கல்லா நிழல்மேவிக்
காமுறுசீர் நால்வர்க்கன்று
எல்லா அறனுரையும்
இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும்
நாலுõர் மயானத்தைச்
சொல்லாதவர் எல்லாம்
செல்லாதவர் தொல்நெறிக்கே.

ஏலமலர்க்குழல் மங்கை நல்லாள்
இமவான் மகள்
பாலமருந் திருமேனி
எங்கள் பரமேட்டியும்
கோலமலர்ப் பொழில்
சூழ்ந்தெழிலார் திருக்கோட்டாற்றுள்
ஆலநிழல் கீழிருந்து
அறம் சொன்ன அழகனே.

மாலினோன் மலரோன்
மைந்தர் நால்வருக்கும்
சீலமாம் அத்துவிதம்
தெளிந்திடப் பாலன்
நெய்யென எங்கும் பரந்தும்
கல் ஆலின் மேவும்
அடிகளை வாழ்த்துவாம்.

மருந்துபோல் ஒளிர்நகை பயில்
மூகையை முன்னம்
திருந்து வாசகம் பேசுமா
செய்த தேசிகருக்குக்
குருந்தும் எய்திநல்
ஆசைவறு நிலையினைக்கூறி
இருந்த நாயகன்
இணையடி ஏத்தி வாழ்த்திடுவாம்.

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar