Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைலாசநாதர் கோயில் சிறப்பு பூஜை திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி ஆலோசனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2016
01:07

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

Default Image

Next News

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இக்கோவிலின் ஆடிக்குண்டம் விழா கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று மாலை, 5:00 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. 36 அடிநீளம், இரண்டு அடி அகலத்திற்கு குண்டம் அமைத்து, அதில் ஊஞ்ச விறகு அடுக்கி, பூஜை செய்து தீ மூட்டினர். தீ நன்கு எரிந்து கொண்டிருக்கும் போது, மழை பெய்ததால், இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் குண்டத்தில் விறகுகள் அடுக்கி எரித்தனர். நள்ளிரவு, 2:00 மணிக்கு விறகுகள் எரித்து முடித்து, பக்தர்கள் நடந்து செல்லும் வகையில், மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் குழுவினர், 30 பேர் குண்டம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று(ஜூலை 26) அதிகாலை, 3:00 மணிக்கு பொதுப்பணித்துறையின் அம்மன் அறக்கட்டளை சார்பில், பவானி ஆற்றிலிருந்து கோவிலுக்கு அம்மன் அழைத்து வரப்பட்டது. கத்தரி பூ கலர் பட்டுச்சேலை உடுத்தி, மலர் அலங்காரம் செய்து அழகிய ரதத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் பூசாரி பரமேஸ்வரன் காலை, 5:30 மணிக்கு குண்டத்தை சுற்றி வந்து, சிறப்பு பூஜை செய்தார். பிறகு, மல்லிகை பூ பந்து, எலுமிச்சை பழம் ஆகியவற்றை குண்டத்தில் உருட்டி விட்டு காலை, 5:45 மணிக்கு முதலில் இறங்கினார். அதைத் தொடர்ந்து உதவி பூசாரிகள், கோலக்கூடை, சக்தி கரகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு குண்டம் இறங்கினர். அவர்களை தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், ஆண்கள், பெண்கள் குழந்தைகளை எடுத்துக் கொண்டும், திருநங்கைகள் என, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.  விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கட்டளைதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar