Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) புதிய வீடு வாங்கலாம் பொன் பொருள் சேர்க்கலாம் கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பிள்ளைகளால் பெருமை சகோதர வழியில் நன்மை!
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பிள்ளைகளால் பெருமை சகோதர வழியில் நன்மை!

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
09:08

துணிவுடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!

கேது, சுக்கிரன் இரு கிரகங்களாலும் மாதம் முழுவதும் நன்மை தொடரும். மற்ற கிரகங்களால் சுமாரான பலனே கிடைக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். சுக்கிரனால் பொருளாதார வளம் மேம்படும். குடும்பத் தேவைக்கான பொருள் தங்கு தடையின்றி கிடைக்கும். ஆடம்பரச் செலவை குறைத்து சிக்கனமாக இருப்பது நல்லது. நண்பர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடும் நிலை உருவாகலாம் கவனம். குடும்பத்தில் குருவால் மந்த நிலை மறையும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை கொள்வீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பொன், பொருள் சேரும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். திருமண தடையால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு நிவாரணம் கிடைத்து இந்த மாதம் வரன் நிச்சயமாகும். செப்.1,2ல் பெண்களால் அதிக நன்மை காண்பீர்கள். சகோதர வகையில் நன்மையான பலனை எதிர்பார்க்கலாம். விருந்து, விழாவிற்கு அடிக்கடி சென்று வருவீர்கள். ஆக.27,28ல் உறவினர்களின் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால் செப்.8,9ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. புதனால் முயற்சியில் தடை குறுக்கிட்டாலும் ஆக.26க்கு பிறகு நிலைமை சீராகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். கடந்த காலத்தில் சூரியனால் ஏற்பட்ட பண விரயம், வீண் அலைச்சல் முதலியன இனி இருக்காது. ஆக. 17,18, செப்.13,14 ல் எதிர்பாராத வகையில் பண லாபம் கிடைக்கும். ஆக.26க்கு பிறகு வியாபாரிகளுக்கு வங்கி நிதியுதவி கிடைக்க வாய்ப்புண்டு.

பணியாளர்களுக்கு சூரியனும் செவ்வாயும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் அலைச்சலும், பணிச்சுமையும் உண்டாகலாம். ஆனாலும், வருமானத்திற்கு குறைவிருக்காது. அதிகாரிகள், சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. செப்.13க்குள் திடீர் பணி, இடமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்.ஆக.25,26ல் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. ஆக. 26 க்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பாராட்டு, புகழ் சிறப்பாக அமையும். ஆக. 26 க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொண்டர்களின் நலனுக்காக செலவு செய்வீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியுடன் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவீர்கள். அரசியல் ரீதியாக தொலைதுõரப் பயணம் மேற்கொள்வீர்கள்.

மாணவர்கள் அக்கறையுடன் உழைத்தால் மட்டுமே முன்னேற்றம் பெற முடியும். ஆனாலும் குருவால் பிற்போக்கான நிலை உண்டாகாது. கல்வி வளர்ச்சிக்கான நல்ல
சூழ்நிலை அமையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் போட்டி, பந்தயத்தில்
வெற்றியும் கிடைக்கும்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதற்கான வருமானம் கிடைக்கப் பெறுவர். ஆடு, மாடு மூலம் பொருளாதார வளம் பெருகும். சிலர் நவீன விவசாயத்தை கையாண்டு நற்பலனைப் பெறுவர். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். உங்களால் குடும்பம் சிறப்படையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான வளர்ச்சி பெறுவர். ஆக. 19,20 ,செப். 15,16 நாட்கள் குதுõகலமான நாட்களாக அமையும். சகோதரிகளால் நன்மை உண்டாகும். செப். 5,6,7ல் ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டாகும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு ஆக. 17,18,19,20,25,26,27,28, செப்.1,2,5,6,7, 13,14,15,16 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான மீனத்தில் சந்திரன் ஆக. 21,22-ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 8,9 நிறம்: வெள்ளை,மஞ்சள்

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாயன்று நரசிம்மரை வழிபடுங்கள். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு தழை கொடுப்பது நல்லது.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar