Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியும் கூடுது தொழில் லாபரும் பெருகுது துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) புதிய வீடு வாங்கலாம் பொன் பொருள் சேர்க்கலாம்
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) புதிய வீடு வாங்கலாம் பொன் பொருள் சேர்க்கலாம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
09:08

பெற்றோர் மீது அன்பு கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

செவ்வாய், சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரனால் ஆக.26க்குப் பிறகு நற்பலன் அதிகரிக்கும். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். செவ்வாயால் பக்தி உயர்வு மேம்படும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். சனி மற்றும் கேதுவால் பொருளாதார வளம் சிறக்கும். தற்போது சிம்ம ராசியில் புதன் வக்கிரத்தில் சிக்கி உள்ளார். அவர் வக்கிரம் அடைந்தாலும் அதே ராசியிலேயே இருப்பதால் பாதிப்பு ஏதும் உண்டாகாது.செப். 13ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அதன் பிறகு சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் குதுõகலம் உண்டாகும். புனித தலங்களுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்க யோகம் ஏற்படும். பூர்வீக சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். சுப விஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் உண்டாகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். ஆக.26க்கு பிறகு பெண்கள் உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் பொன், பொருள் சேரும். ஆக. 29,30,31ல் உறவினர்களின் வருகையால் நன்மை கிடைக்கும். அதே நேரம் செப்.10,11,12 ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். மாதத் தொடக்கத்தில் கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. கண், பல் போன்றவற்றால் பிரச்னை உருவாகலாம் கவனம்.

தொழில், வியாபாரத்தில் சனீஸ்வரர் நல்ல வளர்ச்சியை அளித்துக் கொண்டு இருக்கிறார். இதனால் வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் அடையும். சூரியனால் போட்டியாளர்களின் மூலம் தொல்லை உருவாகலாம். இருந்தாலும் பாதிப்பு ஏதும் உண்டாக வாய்ப்பில்லை. ஆக. 19,20, செப்.15,16 ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு பதவி உயர்வும் தேடி வரும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால், அதே நேரம் உங்கள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். ஆக. 27,28 ல் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை ஆக.26 க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். சக கலைஞர்களின் ஓத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான பலனைக் காண்பர். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல் ரீதியான பயணத்தின் மூலம் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். நண்பர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு பின்பற்றுவது நல்லது.

விவசாயிகளுக்கு வளர்ச்சியான பலன் கிடைக்கும். நெல், கோதுமை, சோளம்,
கேழ்வரகு மற்றும் பழ வகைகள் மூலம் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு. கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக அமையும்.

பெண்கள் உறவினர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர். ஆக.26க்கு பிறகு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பணி புரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். பெண் காவலர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். சகோதரிகளின் ஆதரவைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். செப்.8,9 விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். செப்.15,16ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு ஆக. 19,20,21, 22,27,28,29,30,31, செப். 3,4, 8,9,15,16
நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான மேஷத்தில் சந்திரன் ஆக. 23,24 ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: சிவப்பு, கருப்பு

பரிகாரம்: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். திங்கள் அன்று சிவனையும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமையில் பெருமாள் கோவிலில் விளக்கேற்றுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar