Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மணமாலை சூடும் யோகம் வெற்றி வாகை சூடும் மாதம்!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மணமாலை சூடும் யோகம் வெற்றி வாகை சூடும் மாதம்!

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
09:08

பாச உணர்வுடன் பழகி மகிழும் மீன ராசி அன்பர்களே!

சூரியன், புதன்,குரு, ராகுவால் நன்மை தருவார்கள். கடந்த மாதத்தை விட இந்த மாதம் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். எதிலும் வெற்றி வாகை சூடி மகிழ்வீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும். சேமிக்கும் விதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். ஆக.21,22ல் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். ஆக.17,18, செப்.13,14ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக.27,28ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். உடல் நலம் சீராக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் ஆதாயம் படிப்படியாக அதிகரிக்கும். முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். மறைமுகப் போட்டியாளர்களை இனம் கண்டு ஒதுங்குவீர்கள். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை உருவாகும். குறைந்த முதலீட்டில் புதிய தொழிலை தொடங்கலாம். ஆக. 19,20,23,24 செப். 15,16ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். செப். 1,2 ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

பணியாளர்கள் புதன், குருவின் பலத்தால் சிறப்பான நிலையில் இருப்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறும். செப்.10,11,12ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். ஆக. 26க்கு பிறகு சக பெண் ஊழியர்களிடம் விட்டுகொடுத்து செல்வது நல்லது. பாதுகாப்பு, நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருக்கவும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை ஆக.26க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். ஆனால், பெண்கள் வகையில் தொல்லை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சியைப் பெறுவர். தலைமையின் ஆதரவும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆனால் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காது. கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.ஆக. 29,30,31 ல் மனக்குழப்பம் ஏற்படலாம் கவனம்.

மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டி பந்தயங்களில் பங்கேற்று பரிசு கிடைக்கப் பெறுவர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களின் மூலம் அதிக ஆதாயம் காண்பர். மாத இறுதியில் புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்களில் முடிவு திருப்திகரமாக இருக்கும்.

பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சி நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஆடம்பர முறையில் நடந்தேறும். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தைக் காணலாம். ஆக. 26 க்கு பிறகு சக ஊழியர்களிடம் கவனமுடன் இருப்பது நல்லது. செப்.3,4ல் சிறப்பான பலன்களைக் காணலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஆக.25,26ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் மூலம் சீதனப்பொருள் வரப் பெறலாம்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு ஆக. 17,18,21,22,25,26, செப்.1,2,3,4,10,11, 12,13,14 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான துலாம் ராசியில் சந்திரன் செப். 5,6,7-ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: பச்சை, செந்துõரம்

பரிகாரம்: வீரபத்திரரை வழிபடுங்கள். சனிக்கிழமை சனீஸ்வரரை வணங்கி ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். ராகுகால துர்க்கை வழிபாடு நல்வாழ்வுக்கு துணை நிற்கும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar