அழகிய மானோடு, காளை வாகனத்தில், மகேஸ்வரியை யோகினியாய்க் கொண்ட உத்தமர் ரூருபைரவர், மயில் வாகனத்தில், கவுமாரியை யோகினியாய்க் கொண்ட கொடூர சண்ட பைரவர், அன்ன வாகனத்தில் பிராம்மியை யோகினியாய்க் கொண்ட கருமை நிற அசிதாங்க பைரவர், யானை வாகனத்துடன், இந்திராணியை யோகினியாய்க் கொண்ட மண்டையோடு கபால பைரவர், கருட வாகனம், வைஷ்ணவியை யோகினியாய்க் கொண்ட கோபாக்னி குரோத பைரவர். குதிரை வாகனம், வாராஹியை யோகினியாய்க் கொண்ட மனம் பேதலித்த உன்மத்த பைரவர், நாய் வாகனம், சண்டிகாவை யோகினியாய்க் கொண்ட அழிக்கும் சம்ஹார பைரவர். சிம்ம வாகனம், சாமுண்டியை யோகினியாய்க் கொண்ட துஷ்டபீஷாண பைரவர் என எட்டு வடிவங்களில் வணங்கப்படுகிறார்.