Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » மத்வர்
மத்வர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 செப்
2011
12:09

கர்நாடக மாநிலத்திலுள்ள கிராமத்தில் வசித்த மத்ய கேஹபட்டர் என்பவர் தன் இரு குழந்தைகளைப் பறிகொடுத்தார். இதனால் கவலையடைந்து, உடுப்பி அனந்தேஸ்வரரை, தொடர்ந்து 12 ஆண்டுகள் தன் தர்ம பத்தினியுடன் சேவித்து வந்தார். அதன் பயனாக, மகா வாயுதேவரான ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியே அவர்களுக்கு வாசுதேவன் என்ற திருநாமத்துடன் மகனாக பாளுகம் என்ற கிராமத்தில் அவதரித்தார். குழந்தை வாசுதேவன் சிறு வயதிலேயே பல சித்துக்கள் புரிந்தார். கூடுவூரிலும், தாளேகூட்டிலும் உள்ள விஷ்ணுவை தனியாகச் சென்று சேவித்தார். அப்போது அவருக்கு ஐந்து வயது தான். தனது குருவாக அ÷க்ஷõப்ய தீர்த்தர் என்பவரை ஏற்றுக்கொண்டார். குரு ஒருமுறை சொல்லிக் கொடுப்பதை அப்படியே அவர் மனதில் வாங்கிக்கொண்டார். வித்யாப்பிசமும், உபநயனமும், அத்யயனமும் முறையே வாசுதேவனுக்கு செய்து வைக்கப்பட்டன. 16 வயது நிரம்புவதற்குள்ளாகவே வேத நூல்கள், இலக்கியம், இலக்கணம், காவியம், நாடகம் ஆகியவற்றில் வாசுதேவன் புலமை நிரம்பப் பெற்றார்.

தனது ஆசானின் புத்திரனுக்கு ஏற்பட்ட தலைவலியை, தனது அனுக்கிரஹ சக்தியால் குணப்படுத்தினார். இறைவனிடம் பக்தி செலுத்துவதே முக்திநெறி. பக்தியை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு ஒழுகுதலே நன்மை பயக்கும், என்று அவர் தன் ஆசானுக்கே கூட உபதேசம் செய்தார். மகாசக்தி இருந்தாலும் கூட, பெற்றோர், பெரியோர்களிடம் மரியாதையுடன் நடந்து வந்தார். நண்பர்களிடமும் அன்புடன் பழகி வந்தார்.சந்நியாசம் பெற்று, துறவற வாழ்க்கை மேற்கொள்ள விரும்பிய வாசுதேவர், தாய் தந்தையரின் ஒப்புதலின்றி உடுப்பிக்கு வந்து அச்சுதபிரேஷர் என்பவரிடம் சீடரானார். இவரது வாக்கு வன்மையையும், வாதிக்கும் திறமையையும், வேதப்புலமைகளையும் எண்ணி வியந்து, பலர் இவரை தங்கள் குருவாக போற்றி வழிபட்டனர். பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் சமய கருத்துக்களைப் பரப்பினார். பின் வட இந்திய யாத்திரை மேற்கொண்டார். அதே சமயம் கீதைக்கும் உரை எழுதினார். ஒரு சமயம் உடுப்பியில், மணலில் சிக்கிய படகை விடுவித்தார். அதில் இருந்த சந்தனக் கட்டையை இவருக்கு காணிக்கையாக தந்தனர் மாலுமிகள். அந்தக் கட்டைக்குள் முத்துகிருஷ்ணரின் சிலை இருந்தது. அதையே வணங்கி வந்தார்.

ஒருமுறை கங்கை நதியைப் பார்வையிடச் சென்றார். ஆற்றைக் கடந்தால் தான் அப்பகுதியை ஆண்ட மொகாலய மன்னரை காணமுடியும் என்ற நிலை இருந்தது. ஆற்றிலோ பெரும் வெள்ளம் ஓடியது. வள்ளங்கள் ஓடவில்லை. இவர் துணிச்சலாக ஆற்றில் இறங்கி நடந்தார். அவர் நதியைக் கடந்து வந்தபோது ஆடையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட படவில்லை. அரசர் ஆச்சரியப்பட்டு போனார். அவரைத் தன் நண்பராக்கிக் கொண்டார். இவர், சங்கீதத்திற்கு உயிரையும் வளர்ச்சியையும் தரும் வல்லமை உண்டு என்பதை வலியுறுத்தினார். மக்கள் இவரை மத்வர் என்று அன்புடன் அழைத்தனர். உடுப்பியில் இருந்துகொண்டே பல இடங்களுக்கும் சென்று வந்து கொண்டிருந்தார். ஒரே சமயத்தில் எட்டு பேரை எட்டு சீடர்களாக்கி, எட்டு மடங்களை ஸ்தாபிக்கும்படி செய்தார். ஒருநாள் தன் சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது நான் இதுவரை சொல்லிக் கொடுத்தவைகளை கடைபிடித்து வாழுங்கள் என்று ஆசி வழங்கியபடி மறைந்தார். அப்போது அவருக்கு வயது 79. அவரது கொள்கைகள் இன்றும் மறைய வில்லை.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar