Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
பழநி மலைக்கோயில் சன்னதி இன்று மதியம் நடை அடைப்பு பழநி மலைக்கோயில் சன்னதி இன்று ... குலசேகரப்பட்டினம் தசரா விழா மாறுவேடமணிந்த பக்தர்கள் குலசேகரப்பட்டினம் தசரா விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்குவளை கோவிலில் மரகத லிங்கம் மாயம்: பக்தர்கள் கடும் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2016
11:13

சென்னை: திருக்குவளை, பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த, 1,000 ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் மாயமானது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்த இக்கோவில், தேவார மூவரால் பாடல் பெற்றது. இக்கோவிலில், ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த, விலைமதிப்பற்ற மரகத லிங்கம் உள்ளது. இக்கோவிலில் உள்ள சுயம்பு லிங்கத்திற்கு, காலை, 9:30, மாலை 6:30 மணிக்கு, பூஜை செய்யப்படுவது வழக்கம். தற்போது, விஜய தசமி விழாக்காலம் என்பதால், கடந்த ஒரு வாரமாக, தினமும் மரகத லிங்கத்திற்கும், பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை பூஜை முடிந்து, மரகத லிங்கத்தை, இரும்பு பெட்டியில் வைத்து, இரண்டு பூட்டுகளால் பூட்டி விட்டு, அர்ச்சகர் சென்றார். மாலை, விநாயகருக்கு பூஜை செய்த பின், மரகத லிங்கத்தை எடுக்கச் சென்ற அர்ச்சகர், பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

கோவில் நிர்வாகம் மற்றும், நாகப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கைரேகை நிபுனர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மரகத லிங்கம் குறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: மரகதம் நம் நாட்டில் கிடைக்காது, கிழக்காசிய நாடுகளில் மட்டுமே கிடைக்க கூடிய, அரிய வகை கல். திருக்குவளை, பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக இருந்தாலும், பின், வந்த ராஜேந்திர சோழன், கிழக்காசிய நாடுகளை வென்ற போது, அங்கிருந்து, மரகத கல்லை கொண்டு வந்து, இந்த கோவிலுக்கு லிங்கம் செய்திருக்கலாம் என, நம்பப்படுகிறது.

இந்திரனை துன்புறுத்திய அசுரர்களை, முசுகுந்த சக்கரவர்த்தி போரிட்டு வென்றால், தன்னிடம் இருக்கும், புகழ்வாய்ந்த மரகத லிங்கத்தை, அவனுக்கு தருவதாக கூறினார். முசுகுந்தன் போரில் வென்றும், மரகத லிங்கத்தை தர மனமில்லாமல், தேவ சிற்பியான மயன் மூலம், 6 லிங்கங்களை செய்து, தேவையானதை எடுத்துக்கொள்ள சொன்னார். இந்த நிலையில், இறைவனின் துணையோடு, உண்மையான லிங்கத்தை முசுகுந்தன் எடுத்துவிட, அனைத்து லிங்கங்களையும் அவனிடமே கொடுத்தார், இந்திரன். அவற்றை ஒவ்வொரு இடங்களில் வைத்து, கோவில் எழுப்பி, முசுகுந்தன் வழிபட்டதாக ஐதீகம் உள்ளது. அவையே, சப்த விடங்க தலங்கள்.

மரகத லிங்கத்தின் சிறப்பு: மரகத லிங்கம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் மீது, பால், தேன், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வர். அந்த தீர்த்தத்தை, தொடர்ந்து, 48 நாட்கள் பருகினால், பல்வேறு உடல் பிரச்னைகள் சரியாகும். மாயமான லிங்கத்திற்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேல், அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால், அதன் மருத்துவ குணம் அதிகரித்திருக்கும்.

திருடு போவது எப்படி? பொதுவாக, இந்த சிலைகளை உள்ளூர் சிலை திருடர்கள் திருடுவதில்லை. இதன் மதிப்பை உணர்ந்த, சர்வ தேச கொள்ளையர்கள் மட்டுமே இவ்வாறான திருட்டில் ஈடுபடுகின்றனர். இந்த லிங்கம், மிகச்சிறியது. அதனால், அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இது, தொல்பொருள் ஆய்வுக் கழகத்தில், கலைப்பொருளாக பதிவு செய்யப்பட்டிருந்தால், மாவட்ட காவல்துறை, புதுடில்லியில் உள்ள கிரைம் ரெக்கார்டு பீரோவுக்கு, அதன் பதிவு எண், படம் ஆகியவற்றை அனுப்பி இருக்கும்.

அங்கிருந்து, அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு, தொடர் கண்காணிப்பில் இருந்தால், இரண்டு வாரங்களுக்குள், திருடனை பிடித்து விடலாம். பொதுவாக, கோவில் திறக்காத போது, தன் ஊருக்கு, வரும் வெளியூர்க்காரர்களைப் பற்றி, பொதுமக்கள் விசாரித்து, சந்தேகம் இருந்தால், போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில், தமிழகத்தில், 58 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அவற்றில், 38 ஆயிரம் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அனைத்திலும், புகழ் வாய்ந்த பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றை அரசால் காப்பது, சாத்தியமில்லை. பொதுமக்களிடமும் விழிப் புணர்வு வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: இந்த கோவிலில் உள்ள மரகத லிங்கம், 1983ம் ஆண்டு, தொல்பொருள் ஆய்வுக் கழகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விசாரித்தால், கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எவற்றை பதிவு செய்யலாம்?

நுாறு ஆண்டுகள் பழமையான பொருட்கள், தொல்லியல் துறையால், கலைப்பொருளாக பதிவு செய்யப்பட்டு, இந்திய அரசின் ஆவணக் காப்பகத்தில், அதன் விபரங்கள் காக்கப்படும்.

இது ஒரு தொடர் கதை!

மரகத லிங்கம் மாயமானது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: திருத்துறைபூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் திருவாரூர் திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோவில்களில் இருந்த மரகத லிங்கங்களும்; நாகப்பட்டினம் நீலாயி தாட்சாயிணி அம்மன் கோவிலில் இருந்த கோமேதக லிங்கமும் திருடுபோயுள்ளன. அந்த வரிசையில் தற்போது திருக்குவளை கோவில் மரகத லிங்கமும் இணைந்துள்ளது. இந்த கோவில் தர்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மரகத லிங்க திருட்டிற்கு காவல் துறையும், கோவில் நிர்வாகமும் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று (மே 25)ல் 5 தேர் ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று(மே 26)ல் முதல் வரும், 28 ... மேலும்
 
temple
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, நாளை (மே 27) இரவு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple
சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசுவாமி விசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோயில் வைகாசி தேரோட்டத்தில் ... மேலும்
 
temple
ஏழைக்கு தொண்டு செய்யுங்கள்: ஒரு சமயம் நபிகள் நாயகம் மக்கள் மத்தியில் பேசும் போது, ""மனிதன் கியாமநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.