Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெ., நலமடைய வேண்டி கோலியனூர் சேர்மன் ... மயிலாடுதுறையில் துலா மாத தீர்த்தவாரி: புனித நீராடிய பக்தர்கள்! மயிலாடுதுறையில் துலா மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பராய்த்துறை காவிரியாற்றில் துலா உற்சவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
01:10

திருச்சி: ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். இன்று(அக் 17ல்) ஐப்பசி துலா ஸ்தானம் கோலாகலமாக துவங்கியது. துலா ஸ்தான நிகழ்ச்சியில், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை காவிரியாற்றில் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தார்காவனேஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் காவிரியாற்றில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர்.

Default Image

Next News

துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும்.

அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டுமென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது. ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் பகவான் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.

ஐப்பசி மாதப்பிறப்பிலிருந்து, ஐப்பசி மாதம் முழுவதும் துலாமாதம் எனப்படும். அந்தக் காலங்களில் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானம் துலா ஸ்நானம் என்று சொல்லப்படும். தஞ்சை மாவட்டத்தில் அதனை துலா காவேரி ஸ்நானம் என்று அழைப்பார்கள். காவேரி நிரம்பி வழியும் காலம் ஆதலால், காவேரிக் கரையிலுள்ள புனித இடங்களில் பக்தர்கள் ஸ்நானம் செய்து அருகிலுள்ள கோயில்களில் தரிசனம் செய்வது வழக்கம். மாயவரம், கும்பகோணம், ஸ்ரீரங்கம், திருவையாறு போன்ற இடங்களிலும், காசி, இராமேஸ்வரம் போன்ற இடங்களில் தீர்த்தக் கட்டங்களிலும், புனித ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar