பதிவு செய்த நாள்
22
நவ
2016
10:11
கொச்சி: கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில், சபரிமலை ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், பத்தனம்திட்டா மாவட்டத்தில், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு, உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இந்த கோவில், சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் என, அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது, சபரிமலை ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, பெயர் மாற்றத்துக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அக்., 5ல் நடந்த, தேவஸ்வம் போர்டு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.