ராமேஸ்வரம் கோயில் உண்டியல் திறப்பு ரூ.500, 1000 நோட்டுகள் மிஸ்சிங்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2016 11:11
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து கோயில் உண்டியலில் இந்த ரூபாய் நோட்டுகள் அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் நிலவியது. இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். உண்டியலில் 49 லட்சத்து 18 ஆயிரத்து 792 ரூபாய் ரொக்கம், 101 கிராம் தங்கம், 4.147 கிலோ வெள்ளி கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன் முன்னிலையில் ஊழியர்கள், பள்ளி மாணவிகள் ஈடுபட்டனர்.