Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எட்டெழுத்துத் திருமந்திரத்தின் ... கணபதி முத்திரை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2016
04:12

திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாகத் தீபஅலங்காரம் செய்வது வழக்கம். இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம். இந்த விளக்குகளில் பலவிதங்கள் உள்ளன. திருக்கார்த்திகை அன்று வீட்டில் குறைந்த பட்சம் இருபத்தேழு தீபங்கள் ஏற்ற வேண்டும். ஆகாசத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்குகளும், சமையல் அறையில் ஒன்றும், நடையில் இரண்டும், பின்கட்டில் நான்கும், திண்ணயில் நான்கும், மாடக் குழியில் இரண்டும், நிலைப்படிக்கு இரண்டும், சுவாமி படங்களுக்குக் கீழே இரண்டும், வெளியே யமதீபம் ஒன்றும், திருக்கோலமிட்ட வாசலில் ஐந்தும் என விளக்குகள் ஏற்ற வேண்டும். ஆனால், இந்தக் காலத்தில் வீட்டின் அமைப்பு வெவ்வேறு முறையில் இருப்பதாலும், மாடிவீடு மற்றும் அபார்ட்மெண்டில் வசிப்பதாலும் மேற்சொன்ன முறைப்படி விளக்குகளை ஏற்றமுடியாததால், வசதிக்கு ஏற்ப இருபத்தேழு தீபங்களை ஏற்றிப் பலன் பெறலாம்.

பொதுவாக, பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றுவது சிறந்தது. திருவிளக்கில் உள்ள ஐந்து முகங்கள் பெண்களுக்கு இருக்க வேண்டிய அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை போன்ற ஐந்து குணங்களைக் காட்டுகின்றன. ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்து வழிபடுவதால் ஐந்து குணங்களும் ஒரு சேர ஒளிவிட வேண்டும் என்பதைக் குறிக்கும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்கவேண்டும். தீப ஒளியிலிருந்து வெளிப்படும் புகையால் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் நசியும். தீபங்கள் ஏற்றுவதில் பலவகை உண்டு. அவற்றில் சில... தரையில் வண்ணப் பொடிகளில் சித்திரக் கோலமிட்டு அதன்மீது தீபங்கள் ஏற்றுவதை சித்திர தீபம் என்பர். அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் தீபங்கள் ஏற்றுவதற்கு மாலா தீபம் என்று பெயர். வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியிலோ, மாடிவீடாக இருந்தால் உயரமான இடத்திலோ ஏற்றப்படும் தீபத்தை ஆகாச தீபம் என்பர். இந்த ஆகாச தீபத்தை கார்த்திகை மாதம் சதுர்த்தி திதியில் ஏற்றி வழிபட்டால் எமபயம் நீங்கும்.

நதி நீரில் தீபங்களை மிதக்க விடுவதை ஜல தீபம் என்பர். கங்கை நதிக்கரையோரங்களில் வாழும் மக்கள் மற்றும் புனித யாத்திரையாக காசிக்குச் செல்பவர்கள் கங்கை நதியில் மாலை வேளையில் தீபாராதனை செய்து, கங்காமாதாவை வழிபட்டு, வாழை மட்டையின் மீது தீபம் வைத்து, கங்கையில் மிதக்கவிடுவார்கள். படகு போன்ற வடிவில் உள்ள தீபங்களை நதி நீரில் மிதக்கவிடுவதும் உண்டு. இதனை நௌகா தீபம் என்பர். வீட்டில் எல்லா பகுதிகளிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றுவது சர்வ தீபம் எனப்படும். கோயில்களின் கோபுரங்கள் மீது தீபங்கள் ஏற்றுவதை மோட்ச தீபம் என்று சொல்வர். இது முன்னோர்களுக்கான தீபம். கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று சிவன்கோயில்களில் மாலை நேரத்தில் பனை ஓலைகளால் கூடுபோல் பெரிதாகச் செய்து அதற்குப் பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியில் ஏற்றுவது சர்வாலய தீபம்

மலைமீது பெரிய கொப்பரையில் ஏற்றப்படும் தீபம், அகண்ட தீபம். இந்த தீப ஜோதியை திருவண்ணாமலை, திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருத்தனி, பழனி மலை ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம். கோயில்களில் சுவாமி சன்னதியில் ஒளிர்வது நந்தா விளக்கு. வீட்டின் மாடத்தில் மாலை நேரத்தில் ஏற்றி வைப்பது மாடவிளக்கு. மாரியம்மனுக்குப் பிரார்த்தனை தீபம் ஏற்றுவது மாவிளக்கு. விநாயகப்பெருமானுக்கு ஏற்றுவது கொழுக்கட்டை விளக்கு. இறைவன் சன்னிதி முன் தீபம் ஏற்றி வழிபடுவது மண்ணாலான அகல் விளக்கு. இங்கு வாழைப் பழத்திலும், தேங்காய் மூடியிலும், எலுமிச்சம் பழம் மூடியிலும், பூசணிக்காயிலும் விளக்குகள் ஏற்றுவதும் உண்டு. இவை பரிகார விளக்குகள் ஆகும். நவக்கிரகத் தொகுப்பில் காட்சி தரும் சனிபகவானுக்கு கறுப்பு எள்ளினைக் கொண்டு சிறிய முடிச்சு போல் கறுப்புத் துணியில் தயாரித்து மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுவதை சனி பகவான் விளக்கு என்பர்.

ஒருபெண் தன் இருகைகளிலும் விளக்கு ஏந்தி நிற்பது பாவைவிளக்கு. திருமகள், யானைகள் நடுவே உள்ளது லட்சுமி விளக்கு. திருமண நிகழ்ச்சியில் மணமேடையில், முகூர்த்தப் பானையில் ஏற்றி வைப்பது குடவிளக்கு. இல்லத்திலோ, கோயிலிலோ விளக்குகள் ஏற்றும்போது கிழக்குத் திசை நோக்கித் தீபம் ஏற்றினால் துன்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். மேற்குத்திசை நோக்கி விளக்கு ஏற்றி வைத்தால் கடன் தொல்லை, சனியின் தாக்கம் விலகும். வடக்குத் திசை பார்த்து விளக்கு ஏற்றினால் திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும். மேலும் செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது என்பது விதியாகும். பொதுவாக, வீட்டிலும், கோயிலிலும் விளக்கு ஏற்றி தெய்வங்களை வழிபட வாழ்வில் இன்பம் பொங்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar