மதுரை மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2016 11:12
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாக் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கம்பத்தடி மண்டபம் முன்பு சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.