Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பம்பையில் இருமுடி கட்டும் வழக்கம் சரியானதா? பம்பையில் இருமுடி கட்டும் வழக்கம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
சபரியில் மஞ்சமாதா குடியிருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
17:27

பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம் போன்ற எதுவும் பகவத் ஸ்வரூபத்துக்குக் கிடையாது. எவனொருவன் பிரம்மத்தோடு ஐக்கியம் ஆகின்றானோ அவனே பிரம்மச்சாரி மானுடப் பிறவிகளுக்கே உரித்தான வர்ணங்கள், ஆஸ்ரமங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் இறைவன். பகவானது வடிவம் என்பது தத்வ ஸ்வரூபம். அதை அப்படியேதான் புரிந்துகொள்ள வேண்டும். கிருஷ்ண அஷ்டோத்தரம் 16,000 கோபிகா ஸ்த்ரீகளை மணந்த கிருஷ்ண பகவானை அநாதி பிரம்மசாரி என்றே குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் பிரம்மச்சாரியாக வணங்கப்படும் கணபதி, வட இந்தியாவில் ஸித்தி, புத்தி என இரு துணைவியரோடு வணங்கப்படுகிறார். கார்த்திகேயனான முருகன் வடநாட்டில் பிரம்மசாரி, ஆனால், இங்கே அவருக்கு வள்ளி மற்றும் தெய்வானை என இரு துணைவியர். அதுபோலவே சாஸ்தாவுக்கு பூர்ணா, புஷ்கலா என்று இரண்டு சக்திகள் கூறப்படுகிறது.

பகவானது சக்தி ஸ்வரூபமே அவரது துணைவியர்களாக உருவகப்படுத்தப்படுகிறது. இறைவனது இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி ஸ்வரூபங்களே நமக்கு புலனாகும் வண்ணம் பகவானது இரு புறமும் துணைவியர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சக்தி ஸ்வரூபங்கள் வெளிப்படையாக இல்லாத இடங்களில், இவை இறைவனுக்கு உள்ளேயே உறைந்திருப்பதாகக் கருதப்படுகின்றன. மஞ்சள் மாதா கதை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புவார்கள். கன்னி ஐயப்பன் எந்த வருடம் வரவில்லையோ அப்போது மஞ்சமாதாவை திருமணம் செய்து கொள்வதாக மணிகண்டன் வாக்கு தந்ததாகக் கூறுவர். இதுகுறித்த சான்றுகள் எந்த புராணத்திலும் இல்லை. மகிஷியை லீலாவதி (துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரின் வெளிப்பாடு) அம்சம் என்பார்கள். அது உண்மை எனில், அவள் ஐயப்பனது தாயார் ஸ்தானத்தை அடைகிறாள். அவளுக்கு சாப விமோசனம் கொடுத்து, புது வாழ்வு கொடுத்தவர் ஐயப்பன். எனவே, அவளுக்கு தகப்பன் ஸ்தானம் ஆகிறார். ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் மணிகண்டனால் அவளை திருமணம் செய்து கொள்ளமுடியாது. எனவே, மஞ்சாம்பிகா சாஸ்தாவின் பரிவார தெய்வங்களுள் ஒருத்தியாக மணி மண்டபத்தின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சக்திகளின் ஸ்வரூபமாக அங்கே இருந்து, வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் என்பது பெரியோர்களின் கருத்து.

 
மேலும் தகவல்கள் »
temple
பகவானின் ஆணைப்படி, கட்டுநிரை என்பது எங்கிருந்து கிளம்புகின்றோமோ, அங்கிருந்தே கட்டப்பட வேண்டும். ... மேலும்
 
temple
தர்மஸ்ய சாசனம் கரோதி
இதி தர்ம சாஸ்தா:

சாஸ்தா என்ற வார்த்தைக்கு, உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர், ... மேலும்
 
temple
முதல்முறை தொடங்கி ஒவ்வொரு முறையும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும்போதும் ஐயப்பமார்களுக்கு பலவிதமான ... மேலும்
 
temple
பேட்டைத்துள்ளல் என்பது, நான், எனது என்ற எண்ணங்களை அறவே அகற்றுவதற்காக மட்டுமே. ஒவ்வொரு மனிதனும், ஜாதி, ... மேலும்
 
temple
பஞ்சபூதங்களில் தனித் தன்மை பெற்றது அக்னி. அக்னிக்கு வடிவம் உண்டு; அதேநேரத்தில் வடிவம் இல்லாமலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.