Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டாப்சிலிப்பில் பொங்கல் விழா ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் திருவிழா ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜருக்கு மணி மண்டபம்...அமையுமா? நிறைவேறுமா பக்தர்களின் கோரிக்கை
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜருக்கு மணி மண்டபம்...அமையுமா? நிறைவேறுமா பக்தர்களின் கோரிக்கை

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
12:01

ஸ்ரீபெரும்புதுார்: தமிழகம் முழுவதும், ஸ்ரீராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு விழாவை பிரபலப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதுாரில், அவரை சிறப்பிக்கும் வகையில், திட்டமிடப்பட்ட மணி மண்டபம் கட்டும் பணிகள் இது வரை துவங்கப்பட வில்லை. ஆயிரமாவது ஆண்டு விழா நெருக்கும் நிலையில், அதற்குள் மணி மண்டபம் கட்டப்படுமா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது. ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஊர். சமய, சமூக, சமுதாய சீர்திருத்தங்களை அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர், இவர். இவரின் மனித நேய பண்புகள், கொள்கை, கோட்பாடுகளை அனைத்து தரப்பினரும் போற்றி பாராட்டி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் கோவில், ஸ்ரீராமானுஜர் திருஅவதாரம் செய்து, வழிபட்ட தலம்.இந்த கோவிலில் ராமா னுஜரின் உருவம் தாங்கிய செப்பு விக்ரகம் ஒன்றை, அவரது சீடர்கள் உருவாக்கினர். அது, தானுகந்த திருமேனி என, அழைக்கப்படுகிறது. அந்த திருமேனி, பல நுாறு ஆண்டுகளாக இந்த கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

அவதார திருநட்சத்திர விழா: ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு அவதார திருநட்சத்திர விழா, ஏப்ரல், 22ம் தேதி துவங்கி, மே 1ம் தேதி வரை, வெகு விமரிசையாக இந்த கோவிலில் கொண்டாடப்பட உள்ளது. இந்திய முழுவதும் இருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வர் என்பதால், அதற்கான ஏற்பாடுகள், அரசு சார்பில் செய்யப்படுகின்றன.ராமானுஜரின் ஆயிர மாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல இடங்களில் சொற்பொழிவு, கருத்தரங்கு, கண்காட்சிகள், நாட்காட்டி, புத்தகம் வெளியீட்டு விழா என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழக சுற்றுலா துறை: அந்த வகையில், ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதுாரில், தமிழக அரசின் சார்பில், மணி மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியானது. தமிழக சுற்றுலா துறை சார்பில், ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜருக்கு, 6 கோடி ரூபாய் மதிப்பில் மணி மண்டபம் கட்டி, அதில், ஸ்ரீராமானுஜர் குறித்த வரலாற்று தகவல், நுாலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்து அறநிலைய துறை சார்பில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2.70 ஏக்கர் நிலமும், இதற்காக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா இந்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்க உள்ள நிலையில், மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளும் இதுவரை துவங்கவில்லை. இதனால், ஸ்ரீராமானுஜரை சிறப்பிக்கும் வரையில், ஸ்ரீபெரும்புதுாரில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. இதனால், பக்தர்களும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar