Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துன்பத்தை அழிக்கும் அகோர பூஜை! பிறந்த குழந்தைக்கு தேன் தடவுவது ஏன்? பிறந்த குழந்தைக்கு தேன் தடவுவது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
மாபெரும் வெற்றி தரும் சுதர்சன ஹோமம்!
எழுத்தின் அளவு:
மாபெரும் வெற்றி தரும் சுதர்சன ஹோமம்!

பதிவு செய்த நாள்

25 ஜன
2017
05:01

ஆழி என்றால் சக்கரம். அது ஒரு படைக்கலம். அதேசமயம் அது அழிக்கும் கருவி மட்டுமல்ல; காக்கும் கருவி; தீயோரை அழிக்கும்! நல்லோரைக்  காக்கும்.  காக்கும் கடவுளாகிய திருமாலின் திருக்கரத்தில் விளங்குவது அந்தத் திருவாழி. திரு என்பது திருமகளைக் குறிக்கும். திருவுறைமார்பன் தி ருமால். மார்பில் திருவை வைத்திருக்கும் திருமாலின் திருக்கரத்தில் விளங்குவதால் திருவாழி என்ற சிறப்பு பெற்றது. வைணவர்கள் திருமாலுக்கு  நிகராக திருவாழியை வழிபடுவர். அதனால் அதனை சக்கரத்தாழ்வார் என்றும் போற்றுவர். சக்கரத்தைத் தாங்கியிருப்பதாலேயே எம்பெருமானுக்கு  சக்கரபாணி, சக்கரதாரி என்று திருநாமங்கள் அமைந்தன. பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனிச் சன்னிதியே உண்டு. அதில்  சக்கரத்தாழ்வாரின் உருவம் ஒருபுறம் இருக்கும். பின்புறத்தில் யோக நரசிம்மர் உருவம் இருக்கும். (கருவறையில் பின்புறம் அமைந்திருக்கும்  பலகணி வழியே நரசிம்மரை தரிசிக்கலாம்.) திருமாலின் சக்தியே இந்த சக்கரம்தான். திருமால் சக்கரத்தை இழந்து சங்கடப்பட்டதும் உண்டு.

திருமாலின் பத்து அவதாரங்களில் கிருஷ்ணாவதாரத்தில் மட்டுமே அவர் கையில் சக்கரம் இருந்தது. நரசிம்மர் கையிலும் இருக்கும். ஆனால் இரண்ய  வதத்திற்கு அவர் சக்கரத்தைப் பயன்படுத்தவில்லை. ஆனால் நரசிம்மத்தின் விரல் நகங்களில் சக்கரத்தின் சக்தி மறைமுகமாக இருந்தது என்பர். கி ருஷ்ணாவதாரத்திலும், பாரதப்போரில் நான் படை (ஆயுதம்) எடுக்கமாட்டேன் என்று துரியோதனனிடம் சத்தியம் செய்துவிட்டார். ஜயத்ரதனை  துரியோதனாதியர் மறைத்து வைத்தனர். அவனை சூரிய அஸ்தமனத்துக்குள் வெளிப்படுத்தினால்தான் அர்ஜுனன் செய்த சபதப்படி அவனைக்  கொல்லமுடியும். அப்பொழுது சூரியனை மறைத்து பொய்யான அஸ்தமனம் ஏற்படுத்த சக்கரத்தைப் பயன்படுத்தினார். (அவர் கையால் சக்கரத்தைக்  கொண்டு யாரையும் தாக்கவில்லை. எனவே சத்தியம் மீறியதாகாது என்பது வாதம்.)

ஒருசமயம் இந்திரன், சிவபெருமானை தரிசிக்க கயிலை வந்துகொண்டிருந்தான். காணும் பொருளிலெல்லாம் இறைவன் உள்ளான் என்பதை இந் திரன் உணர்ந்திருக்கிறானா என்று சோதிக்க எண்ணினார் சிவன். ருத்ரவடிவில் இந்திரன்முன் தோன்றினார். யாரோ ஒரு அரக்கன் தன்னை வழிமறி ப்ப தாக எண்ணி சினமுற்ற இந்திரன் வஜ்ராயுதத்தை ருத்ரன்மீது ஏவினான். அது எம்பெருமான்மீது பட்டது. உடனே அவர் உடல் சிலிர்த்தது. ÷ காபக்கனல் வியர்வைத் துளிகளாயின. அவை கடலில் விழுந்தன. ருத்ரவடிவில் வந்தது சிவபெருமானே என்றறிந்த இந்திரன், அவர் திருவடிகளில்  விழுந்தான். கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஓர் அசுரனாக உருவெடுத்தது. பிரம்மதேவனால் ஆசிர்வதிக்கப்பட்டது.  சமுத்திரராஜனால் அவ்வசுரன் வளர்க்கப்பட்டான். ஜலந்திரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.

ருத்ரனின் வியர்வையில் தோன்றி பிரம்மனிடம் வரங்களும் பெற்றதால், அசுரர்களுக்கே உரிய ஆணவம் அவனைச் சூழ்ந்தது. எவராலும் தன்னை  அழிக்க முடியாதென்ற எண்ணமும் வந்தது. இந்திரனை அடிமையாக்கினான். திருமாலையும்கூட வென்றான். கயிலைநாதனையும் வெல்வேனென்று  புறப்பட்டான். அப்போது சிவபெருமானே ஒரு வேதியர் வடிவில் அவன்முன் தோன்றினார். நான் சிவபெருமானுக்கு அடுத்த நிலையிலுள்ளவன். நீ  சிவனை வெல்லப் புறப்பட்டிருக்கிறாய். அதற்குமுன் என்னால் உருவாக்கப்படும் ஒரு யந்திரத்தை உன்னால் அழிக்கமுடியுமா பார் என்று சொல்லி,  சிவபெருமான் தனது கால்விரல்களால் தரையில் வரி வடிவமாக மகா சுதர்சன சக்கரத்தை வரைந்தார். எங்கே, இந்த சக்கரத்தை எடுத்து உன் தலைமீது  வைத்துக் கொள் பார்க்கலாம் என்றார். ஜலந்திரன் சுதர்சன சக்கரத்தை தூக்கித் தன் தலையில் வைத்தான்; அவ்வளவுதான். அவனது உடல் இருகூறா ய்ப் பிளந்தது. உடல்தான் அழிந்தது. ஆனால் உயிராய் அவனிடமிருந்த ருத்ரசக்தி அழியாவரம் பெற்றதல்லவா? அதனால் அந்த சக்தி சக்கரத்தில்  ஐக்கியமாகிவிட்டது. மகாசுதர்சனம் சிவபெருமான் கரத்தையடைந்தது.

கோலோகத்தில் திருமாலின் தொண்டில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவள் துளசிதேவி. அவள் ஒரு சாபத்தால் பூவுலகில் காலநேமி எனும்  அசுரனின் மகளாய்ப் பிறந்தாள். இப்பொழுது அவளது பெயர் பிருந்தா. இவளே ஜலந்திரனுக்கு மனைவியானாள். இவளது பதிவிரதாசக்திய õல்தான் ஜலந்திரன் அழியா வரம்பெற முடிந்தது. ஆனால் கொடுமைகள் புரிந்ததால் சிவபெருமானாலேயே அழிந்தான். அப்பொழுது பிருந்தை  தீக்குளித்து உயிர்நீத்தாள். எப்போதும் திருமாலுடனே வசிக்கும் வரம்பெற்று மீண்டும் துளசியாகி திருமாலின் சேவையைத் தொடர்ந்தாள். அதனால்  திருத்துழாய் என்று வைணவர்களால் போற்றப்பட்டாள். துளசி மாலை சூடிய திருமாலும், திருத்துழாய் மார்பன் எனப்பட்டார். அதுமட்டுமல்ல; சத் யபாமா ஸ்ரீகிருஷ்ணனை தராசுத் தட்டில் (துலாபாரம்) ஏற்றிய போது, மறுதட்டில் ருக்மணி பக்தியுடன் வைத்த ஒரு துளசி தளம் தான் கிருஷ்ணனுக்கு  (எடைக்கு) நிகரானது. சத்யபாமா வைத்த பொன்னும் பொருளுமல்ல.

மேலும் தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை அழிக்கவும் சுதர்சனம் தேவையென்பதை திருமால் உணர்ந்தார். சிவபெருமானிடமிருந்து அதனைப்  பெற தவம்புரிந்தார். ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சிப்பதாக முடிவுசெய்தார். யாராயிருந்தாலும் உண்மையான பக்தி இருக்கவேண்டும். அது  திருமாலிடம் உள்ளதா என்பதை சோதிக்க நினைத்தார் சிவபெருமான். எனவே ஒரு தாமரை மலரை மறைத்துவிட்டார். 999 மலர்களால் பூசி த்துவிட்டு ஆயிரமாவது மலரைக் காணாமல் திருமால் சற்று திகைத்தார். ஆனால் சிறிதும் தயங்காமல் தன் கண்ணாகிய ஒரு மலரையே பறித்து பூ ஜித்து முடித்துவிட்டார். ஆம்; செந்தாமரைக் கண்ணன்தானே! உடல், உயிர், உலகம் அனைத்துப் பொருளும் இறைவனுடையவை என்பதை திருமா லே எடுத்துக்காட்டிவிட்டார். பக்தியில் தியாகத்திற்கு முக்கிய இடமுண்டு. சைவத்தில் ஒரு கண்ணப்பன்; வைணவத்தில் ஒரு கூரத்தாழ்வான்.

திருமாலின் தியாக பக்திக்கு மகிழ்ந்த சிவபெருமான் மகாசுதர்சனத்தை திருமாலிடமே தந்து, உமது காக்கும் தொழிலுக்கு இது பேருதவியாயிருக்கும்  என்று ஆசிர்வதித்தார். உலகில் எந்த தீய சக்தியையும் அழிக்கவல்லது சுதர்சனம் என்று சுதர்சன மூல மந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  நல்லவர்களுக்கு எதிராகச் செயல்படும் யந்திரம், தந்திரம், மந்திரம், அஸ்திரம், சஸ்திரம் அனைத்தையும் அழித்து அவர்களைக் காக்கவல்லது  சுதர்சனம். ருத்ரனால் உருவாக்கப்பட்டதால் அதில் ருத்ரசக்தியும் விஷ்ணுசக்தியும் இணைந்தேயுள்ளன. இதுதான் ஒரே திருவாழியில்  இரு தெய்வ ங்கள் உள்ள அபூர்வ சக்கரம். மகாபாரதப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அப்பொழுது தனது  விராட் விசுவரூப தரிசனமும் தந்தார். அதில் அண்ட சராசரங்களையும் சகல தேவர்களையும் கண்டு வியந்தான் அர்ஜுனன். அப்பொழுதே அனைத்து  சக்திகளையும் திரட்டி சுதர்சன சக்கரத்தை (யந்திரத்தை) உருவாக்கினார். அங்கேயே முளைத்திருந்த நாயுருவி சமித்துகளைக் கொண்டு மஹாசுதர்சன  ஹோமத்தையும் நடத்திய பின்பு போரை தொடங்கச்செய்தார். அதனாலேயே பாண்டவர்கள் பெருவெற்றி பெறமுடிந்தது. இராவணனை வெல்ல  ஒரு ஆதித்ய ஹ்ருதயம், துரியோதனாதியர்களை வெல்ல சுதர்சன ஹோமம்! எனவே சுதர்சன ஹோமம் செய்பவர்கள் இரு தெய்வங்களின் அருளால்  பெரும்வெற்றி பெறுவர்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar