Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகருக்கு ஏன் அருகம்புல் ... திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்? திருமணத்தின் போது அக்னியை சுற்றி ...
முதல் பக்கம் » துளிகள்
பணம் பத்தும் செய்யும் இதில் பத்து என்பது என்ன?
எழுத்தின் அளவு:
பணம் பத்தும் செய்யும் இதில் பத்து என்பது என்ன?

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
04:02

பத்து என்ற சொல் எண்ணில் அடங்காத என்ற வகையில் இங்கு பொருள் தருகிறது. பொதுவாக, எதை வேண்டுமானாலும் பணத்தால் சாதித்து விடலாம் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் பணத்தால் எல்லாமே பெற்று விட முடியாது. அதாவது மனிதர்களிடம் 10 வித குணங்கள் இருந்தால் நிம்மதி சந்தோஷம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும், எப்படி? ஒருவனிடம் பணம் தேவைக்கு அதிகமான அளவு வந்துவிட்டால் இந்த பத்துவித குணங்களுமோ அல்லது அதில் பலவோ சிலவோ வந்து வெளியேறாமல் அவனிடம் வந்து ஒட்டிக்கொள்ளுமாம்  அவை என்ன?  காம - குரோத -லோப-மோஹ -மத-மச்சர-டம்ப -தர்ப்ப-ஈர்ஷை -அசூயை எனபவைகளே அந்த பத்தும்  இவைகளை காமாதி தச வர்கம் என்பர். காமாதி தச வர்க்கங்களின் விளக்கங்கள்:-

காமமேன்பது  :- ஆசை ப்ரீதி தனம்,தான்யம்,புத்திரன் மனைவி, மக்கள், பௌத்திராதிகளின் பேரில்  அதீதமான ப்ரீதி வைத்தல்   இதனால்  துயரமடைந்தவர்   நரகாசுரன்  போன்றோர்.

குரோதமேன்பது  :- தீய இச்சை ஒருவருக்கு  ஏதாவது ஒரு விதத்தில் அவர் நல்லவராகவே இருந்தாலும் கெடுதி  விளைவிக்க  பிரயத்தனம்  செய்ய  இச்சை  கொள்ளுதல் , இக்குனத்தால்  துயரமடைந்தவர்  பகாசுரன் போன்றோர்

லோபமேன்பது  :- கஞ்சத்தனம்
தனது சொத்திலிருந்து  நண்பர்கள் உறவினர்களுக்கு மட்டுமல்ல ஞானிகளுக்கும் கூட சிறிதேனும்  உபயோகமாக்க கொடுக்க  கூடாது  என்னும்  எண்ணமிருத்தல்  இதற்கு  சான்று  துரியோதனன்  .,

மோஹமென்பது :- காதல்
புத்திர  களத்திராதிகளின் மீது  அதிக  பற்று  வைத்திருப்பது மற்றொன்று தனக்கு  உண்டாகி இருக்கும்  செல்வம் பொருள் போதாதென்று இன்னும்  கொஞ்சம்  அதிகமாய்  சம்பாதிக்க  வேண்டும்  என்னும்  ஆசையை  விருத்தி  செய்தல் . புத்திர  சோகத்தால்  துயரம்  பெற்றவர்:-  தசரத  மகாராஜன்.,

மதமென்பது  :- வெறியுணர்வு- அகம்பாவம் -ஈகோ
பணம்  பொருள்  அதிகம்  சேர்த்து  அதனால்  இதரர்களை  லட்சியம்  வைக்காமல்  பேசுதல்  
இதனால்  துயரமடைந்தவர்  கார்த்தவீரியாச்சுணன் .,

மச்சரமென்பது  :-
தன்னை  போல்  மற்றவரும்  சுகம்  அனுபவிப்பதை  பொறுக்காமல்  விளைவிக்கும் மனோ பாவத்தை  உண்டாக்குதல்
இக்குணத்தால் துயரமடைந்தவர் – சிசுபாலதந்தவககிரன்.,

டம்பமென்பது :- ஆடம்பரம்
பலர்  மெச்சவேண்டும் என்பதற்காகவே தனக்கு உடன்படாடில்லாவிட்டாலும் தர்மம், ஹோமம், யாகம் முதலானவைகளை  செய்தல்  
இதனால்  துயரமடைந்தவர் – புரூர சக்கரவர்த்தி .,

த்ர்ப்பமென்பது :- கர்வம் அகங்காரம்
புத்திர,மித்திர, களத்திர  இந்த  சம்பத்துக்களில்  தனக்கு  நிகரானவன்  ஒருவரும்  இல்லை  என்று  கர்வப்படுதல்  
இதனால்  துயரமடைந்தவர் பரசுராமன்  .,

ஈர்ஷை எனபது  :- கெடு மனம்
தனக்கு  நேர்ந்த  துக்கம்  பிறருக்கும்  நேர  வேண்டும்  என்று  எண்ணுதல்,
இதனால் கெட்டது – அருனாஷதன்.,

அசுயை என்பது:- பொறாமையின் உச்சம்
கெடுதி செய்தவனுக்கு கெடுதி  விளைவிக்க  வேண்டும்  என்று  எண்ணுதல் ,
இக்குனத்தால் துயரமடைந்தவர்-பவுண்ரீக வாசுதேவன் .

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar