Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் ... சூலக்கல் மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் சூலக்கல் மாரியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1008 லிங்கங்களுடன் அருள்பாலிக்கும் ஆத்மலிங்கேஸ்வர கோயில்!
எழுத்தின் அளவு:
1008 லிங்கங்களுடன் அருள்பாலிக்கும் ஆத்மலிங்கேஸ்வர கோயில்!

பதிவு செய்த நாள்

04 மார்
2017
11:03

சாணார்பட்டி: விஞ்ஞானம், தொழில்நுட்பம் என உலகம் ஒருபுறம் நவீனமயமாகி வரும் நிலையில், மற்றொருபுறம் ஆன்மிக வழிபாடும் அளவில்லாமல் வளர்ந்தே வருகிறது.  சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி சச்சிதானந்த சுவாமிகள் இதே பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகுடிலில் சிவலிங்கம் வைத்து வழிபட்டு வந்தார். இருஆண்டுகளுக்கு முன் இங்கு பெரிய அளவில் லிங்கேஸ்வரர் ஆலயம் எழுப்பும் எண்ணம் அவருக்கு தோன்றியது.  இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆன்மிகவாதிகள் கொண்ட குழுவை அமைத்தார். நுாறு லிங்கங்களுடன் கூடிய ஆத்மலிங்கேஸ்வரர் எனும் ஆலயத்தை எழுப்ப முடிவு செய்தனர். இதையடுத்து 1008 சிறிய வகை லிங்கங்களுக்கும் மூலவரான ஆத்மலிங்கேஸ்வரருக்கும் சிலை ஆர்டர் செய்து பணியை துவக்கினர்.  ஆலயம் எழுப்ப உள்ள இடத்தில் 1008 சிறிய லிங்கங்களை நிறுவி கடந்த பிப்., 12 அன்று காலை சண்டி ஹோமமும் மாலையில் பிரித்தியங்கிரா ஹோமமும் நடந்தது.  மறுநாள் காலை 1008 தம்பதிகள் பங்கேற்ற மஹாருத்ர ஹோமம் நடந்தது. இதில் குஜராத் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆன்மிக அன்பர்கள், சிவனடியார்கள் பங்கேற்றனர்.  குழுவை சேர்ந்த கணேசன் கூறியதாவது,‘ஹோமம் நடந்த இடத்தில் ஆத்மலிங்கேஸ்வரர் ஆயலம் எழுப்பப்பட உள்ளது. ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த 1008  லிங்கங்களும் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம்’ என்றார். இவரை 94432 74564ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar