Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பெண்களால் நன்மை பிள்ளைகளால் பெருமை! மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) நகை வாங்கும் யோகம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2017
14:45

அன்புக்கு முதலிடம் தரும் மேஷ ராசி அன்பர்களே!

ராசிக்கு 12ம் இடத்தில் கேது  நன்மையை வாரி வழங்குவார். சந்திரனால் எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. செவ்வாய் 1ம் இடத்தில் இருப்பது சாதகமற்ற இடம் என்றாலும் அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அவரால் கெடுபலன் உண்டாகாது. புதனால் தடைகள் குறுக்கிட்டாலும் அதை கேதுவால் முறியடித்து வெற்றி காண்பீர்கள். மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமை கொள்வீர்கள். பெண்கள் மிக உதவிகரமாக செயல்படுவர். ஏப்.3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். மார்ச் 27,28,29ல் உறவினர்  வருகையால்  நன்மை உண்டாகும்.   நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி, தடைகள் குறுக்கிடலாம்.  சூரியனால் அலைச்சல், வீண்விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. மார்ச் 14,  ஏப்.9,10,11ல் எதிர்பாராத வகையில் வருமானம் வர வாய்ப்புண்டு. கேதுவால் போட்டியாளர்களின் எதிர்ப்பை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஏப்.11க்கு பிறகு அரசாங்க  வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ராகுவால் பங்குதாரர் வகையில் கருத்துவேறுபாடு  ஏற்படலாம். தொழில் விஷயமாக சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

பணியாளர்களுக்கு கேதுவால் வேலையில் திருப்தியும், நிம்மதியும் உண்டாகும்.  ஆனால் வேலைப்பளு சற்று அதிகரிக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். மார்ச் 23,24 ஆகிய நாட்கள் சிறப்பான நாட்களாக இருக்கும்.  சிலருக்கு அதிர்ஷ்டவசமாக விரும்பிய பணி, இடமாற்றம் வர வாய்ப்புண்டு. ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கூடுதல் பலனைக் காணலாம். ஏப்.11க்கு பிறகு அரசு பணியாளர்களுக்கு பணியில் அக்கறை தேவை.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சக கலைஞர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகலாம்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். ஏப்.7,8ல்  வீண் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் அக்கறையுடன்  படிப்பது அவசியம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சகமாணவர்களிடம் பார்த்து பழகவும். பெற்றோர், ஆசிரியர்களின்
அறிவுரையை ஏற்பது நல்லது.

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலைப் பெறுவர். நெல், கோதுமை, சோளம், எள்,கரும்பு மற்றும் பழ வகைகள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் தாமதம் உண்டாகும். வழக்கு, விவகாரத்தில் முடிவு  சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். கணவனின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களின் செயல்பாடால் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மார்ச் 15,16,17, ஏப்.12,13 ஆகிய நாட்கள் சிறப்பானதாக இருக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப்பெறலாம். ஏப்.11க்கு பிறகு அக்கம்பக்கத்தினரால் தொல்லை ஏற்படலாம்.

நல்ல நாள்: மார்ச் 14,15,16,17,23,24,25,26, 30,31, ஏப். 3,4,9,10,11,12,13

கவன நாள்: மார்ச் 18,19 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட  எண்: 6,7  நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.  புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்வது நல்லது. பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். செவ்வாயன்று  முருகனுக்கு விளக்கேற்றுவது நல்லது. தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018) »
temple
மற்றவருக்கு உதாரணமாக திகழும் மேஷ ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 7-ம் இடத்தில்   அமர்ந்து ... மேலும்
 
temple
பிறரை குறை கூற விரும்பாத ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து சாதகபலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மற்றவர் நலனில் அக்கறை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு  5-ல் இருக்கும் குரு பகவானும், 11-ல் ... மேலும்
 
temple
மனித நேயமுடன் நடக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் வளர்ச்சிக்கான சூழ்நிலை ... மேலும்
 
temple
சிந்தனையால் தூயவாழ்வு நடத்தும் சிம்ம ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் அதிக நன்மை உண்டாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.