Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அரசு வகையில் நன்மை தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சியில் வெற்றி கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) சிறப்பான மாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2017
15:09

லட்சியநோக்குடன் செயலாற்றும்  மகர ராசி அன்பர்களே!

ராசிக்கு  9ம் இடத்தில் இருக்கும் குரு, 3ம் இடத்தில் உள்ள சுக்கிரன், 11ம் இடத்தில் உள்ள சனி ஆகியோரின் பக்க பலத்தால் நன்மை மேலோங்கும். தற்போது  சூரியனும் சாதகமான பலனை வழங்க காத்திருக்கிறார். எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும் சிறப்பான மாதமாக இருக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை தாராள செலவில் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மிக உறுதுணையாக  இருப்பர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி ஆடம்பர முறையில் நிறைவேறும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். ஆன்மிகச் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.  மார்ச் 23,24ல் சகோதர வழியில்  எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மார்ச் 18,19ல்  உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 30,31ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று விலகி இருக்கவும். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை அனைத்தும் மறையும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு உண்டாகாது.  பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.

தொழில், வியாபாரம் சிறப்படையும். எதிர்பார்த்ததை விட வருமானம் உயரும். புதிய தொழில் முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். சிலர் தங்கள் வியாபாரத்தை வெளிமாநிலம், நாட்டில் விரிவுபடுத்த வாய்ப்புண்டு. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் உயரும். மறைமுகப்போட்டி குறுக்கிட்டாலும் முறியடித்து விடுவீர்கள். மார்ச் 20,21,22,25,26ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஏப்.3,4ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்கள் சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். சக ஊழியர்களின்  ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணைநிற்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால்  கடின உழைப்பு வேண்டியது இருக்கும். முயற்சி இருந்தால் மட்டுமே  கோரிக்கை நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். மார்ச் 15,16,17, ஏப்.12,13 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.

கலைஞர்கள் உற்சாகமுடன் செயல்பட்டு வருவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில் ரீதியான பயணத்தால் இனிய அனுபவம்  கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள்  சீரான நிலையில் இருப்பர். புகழ், பாராட்டு எதிர்பார்த்த படி இருக்காது. தொண்டர்களுக்காக செலவழிக்க நேரிடும். ஏப்.1,2ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். இருப்பினும் குருவின் சாதக பலனால்  ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். கரும்பு, எள், கொள்ளு, பழவகைகள், கிழங்கு வகைகளில் விளைச்சல் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில் முடிவு  சுமாராக இருக்கும்.

பெண்கள் குதூகலமான வாழ்வு பெறுவர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். அண்டை வீட்டாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மார்ச் 27,28,29ல் புத்தாடை, நகைகள் வாங்க யோகமுண்டு. பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். ஏப்.5,6ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் நன்மை உண்டாகும். கேதுவால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம் கவனம்.நெருப்பு, மின்சார தொடர்பான பணியில்  கவனம் தேவை.

நல்ல நாள்: மார்ச் 15,16,17,18,19,23,24,27, 28,29, ஏப். 3,4,5,6,12,13

கவன நாள்: ஏப்.7,8 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,5,7 நிறம்:  மஞ்சள், சிவப்பு

பரிகாரம்: முருகன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்க தவறாதீர்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்வது நல்லது. புதன் கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிபயறு தானம் செய்யுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்
 
temple
மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்
 
temple
பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்
 
temple
மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.