Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே! மேஷம்: நட்புக்கு முன்னுரிமை ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆடம்பர வாழ்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆடம்பர வாழ்வு

பதிவு செய்த நாள்

13 மார்
2017
03:03

ரகசியத்தை காப்பதில் வல்லவரான மீன ராசி அன்பர்களே!

6 ல் இருக்கும் ராகு, 7 ல் இருக்கும் குரு,  ராசியில் சுக்கிரன் மூவராலும் நன்மை உண்டாகும். 2ல் இருக்கும் செவ்வாய் ஏப்.11ல் 3ம் இடத்திற்கு மாறுவது சாதகமான பலனைக் கொடுக்கும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதாரம் மேம்படும். ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். குருவால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் கையில் கூடும். ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். எந்த பிரச்னையிலும் சிக்காமல் பாதுகாப்பாக நடந்து கொள்வீர்கள். புதனால் குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னை உருவாகலாம். கணவன், மனைவி  ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கும். சகோதரிகளால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன்,  பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். நண்பர்கள்  உறுதுணையாக இருப்பர். மார்ச் 27,28,29 ல் அவர்களால் நன்மை கிடைக்கும். மார்ச் 23,24ல் உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். ஏப்.3,4ல்  உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம்.  சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள்  கவனமாக இருப்பது அவசியம். ஏப்.11க்கு பிறகு புதிய வீடுமனை வாகனம் வாங்க யோகம் உண்டாகும். உடல் நலம் சீராக இருக்கும். சூரியனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.  பயணத்தின் போது  கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. லாபம் படிப்படியாக அதிகரிக்கும். செவ்வாயால்  அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். போட்டியாளர்களால் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். மார்ச் 25,26,30,31ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மார்ச் 14,15ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு. பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

பணியாளர்கள் வேலைப் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். வருமானம் குறைவின்றி கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சற்று முயற்சித்தால் கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு வேறு இடத்திற்கு  பணிமாற்றம் கிடைக்கும். ஏப்.11க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண்பர். மார்ச் 20,21,22 ஆகிய நாட்கள் சிறப்பானதாக  அமையும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சக பெண்கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர்.

அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும். ஏப்.11க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு.

மாணவர்களுக்கு கல்வியில் விடாமுயற்சி தேவைப்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும்.

விவசாயிகள் எதிர்பார்த்ததை விட மகசூல் கிடைக்கும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். ஏப்.11க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

பெண்களுக்கு பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். ஏப்.1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வந்து சேரும். மார்ச் 4, ஏப்.9,10,11ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும். ஏப்.11க்கு பிறகு எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும்.

நல்ல நாள்: மார்ச் 14,20,21,22,23,24,27, 28,29, ஏப். 1,2,7,8,9,10,11

கவன நாள்: மார்ச் 15,16,17, ஏப்.12,13 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 2,4  நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். தினமும் சூரியனை வணங்குங்கள்.சிவன் கோவில் வழிபாடு நன்மைக்கு வழிவகுக்கும். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar