Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் ... மதுரை இஸ்கான் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா மதுரை இஸ்கான் கோயிலில் ராமானுஜரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிசங்கரரின் அவதார தலத்தில் கனகதாரா யாகம்
எழுத்தின் அளவு:
ஆதிசங்கரரின் அவதார தலத்தில் கனகதாரா யாகம்

பதிவு செய்த நாள்

24 மார்
2017
03:03

காலடி: ஆதிசங்கரரின் அவதார தலமான காலடி கிருஷ்ணர் கோயிலில், அட்சய திரிதியையை ஒட்டிமே ஏப்ரல் 28ம் தேதி கனகதாரா யாகம் நடக்கிறது. ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில், ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷாம் தேஹி என்று பிக்ஷை கேட்டார். அந்த பெண், தன் கணவர் ஏகாதசி விரதம் முடித்து உண்பதற்காக வைத்திருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார்.

அந்த ஏழையின் செயல் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்படையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். மகிழ்ந்த மகாலட்சுமி, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விதத்தில், எர்ணாகுளம் அருகிலுள்ள காலடி கிருஷ்ணன் கோயில் யாக மண்டபத்தில் ஏப்ரல் 26 முதல் 30 வரை கனகதாரா யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள், கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகள், 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்வர். ஏப்ரல் 28 அட்சய திரிதியை அன்று காலை 9 மணிக்கு, மகாலட்சுமிக்கு தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகளால் அபிஷேகம் நடக்கும். அபிஷேக தங்க, வெள்ளி நெல்லிக்கனிகள் விற்பனை செய்யப்படும். இந்த நெல்லிக்கனிகளை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள்.

கனகதாரா எந்திரம்: ரூ. 351
தங்க நெல்லிக்கனி: ரூ. 12,001
வெள்ளி நெல்லிக்கனி: ரூ. 2,001
பிராமண போஜனம்: ரூ. 3.001
லெக்ஷ்மி நாராயண அபிஷேகம்: ரூ. 17,001
பிராமண தட்சிணை: ரூ. 1001
அன்னதானம்: ரூ. 6001
கனகதாரா அர்ச்சனை: ரூ. 101
நெல்லிக்கனி பாரா: ரூ. 51
நெல்லிக்கனி சமர்ப்பணம்: ரூ. 10

தொடர்புக்கு: காப்பிள்ளி ஸ்ரீகுமார் நம்பூதிரி,மேனேஜிங் டிரஸ்டி, ஸ்ரீகிருஷ்ணன் கோயில் காலடி- 683 574, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா
மொபைல்: 093888 62321

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
கடையநல்லுார்; கடையநல்லுார் பூமிநீளா சமேத நீலமணிநாதர் (கரியமாணிக்கப்பெருமாள்) கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar