Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மகரம்: ( உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) 75/100 மகரம்: ( உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திராட்டதி, ரேவதி) 80/100 மீனம்: (பூரட்டாதி 4, உத்திராட்டதி, ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2017 முதல் 13.4.2018 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) 70/100
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2017
16:50

குழந்தை உள்ளம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

குரு பார்வை வந்தாச்சு! குறையெல்லாம் தீர்ந்தாச்சு!

ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு  8ல் இருக்கும் குரு, செப்.1ல்  9-ம் இடமான துலாம் ராசிக்கு  செல்கிறார். அங்கிருந்து  2018 பிப்.13ல்  10-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.  ராசிக்கு 7-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு  ஜூலை 26ல்    6-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார்.  ராசிக்கு 1ல் இருக்கும் கேது,  ஜூலை 26ல்   12-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். ராசிக்கு 10ம் இடமான விருச்சிகத்தில் இருக்கும் சனி டிச.18ல்  தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலையின் அடிப்படையில் பலனைக் காணலாம்.             

ஏப்ரல் 14- – ஜூலை 31

குரு  சாதகமற்று இருந்தாலும் அவரது 5,7,9  பார்வையால் குறையனைத்தும் விலகி நன்மை உண்டாகும். குடும்பத்தேவை நிறைவேறும்.  பணியாளர்களுக்கு சலுகை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பணிச்சுமை கூடும்.  எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். போட்டியாளரால் பிரச்னை  தலைதுாக்கலாம்.  புதிய வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது. கலைஞர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கைநழுவிப் போகலாம். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் அக்கறை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும்.  சகோதரிகள்  ஆதரவுடன் இருப்பர்.            

ஆகஸ்ட்- 1 – 2018 ஜனவரி 31             

குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவை அனைத்தும் நிறைவேறும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பணப்புழக்கம்  அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த  சலுகை கிடைக்கப் பெறுவர்.  தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். ஆனால், கேதுவால் அவ்வப்போது பண விரயம் ஏற்படலாம். கலைஞர்கள் எளிதில்  புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க சற்று தாமதமாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் வளர்ச்சிப்பாதையில் செல்வர்.  வழக்கு விவகார முடிவு திருப்தியளிக்கும். பெண்கள்  குடும்பத்தாரின் அன்பை பெறுவர். விருந்து, விழா என சென்று மகிழ்வர்.  சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.            

2018 பிப்ரவரி 1 – ஏப்ரல்13            

குடும்பத்தினர் ஆதரவுடன் இருப்பர். ஆடம்பர செலவைத் தவிர்ப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் குருவின் பார்வை பலத்தால் வருமானம் உயரும். புதிய தொழில் முயற்சி ஓரளவு வெற்றி பெறும். கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் சுமாரான வளர்ச்சி காண்பர். பதவி கிடைப்பது அரிது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கப் பெறுவர்.  சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.  பெண்கள் குடும்ப நலனுக்காக  விட்டுக் கொடுத்துப் போகவும். பயணத்தின் போது  கவனம் தேவை.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு.வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனைசெல்ல வேண்டிய கோவில் சமயபுரம் மாரியம்மன்.

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2017 முதல் 13.4.2018 வரை) »
temple
வெளிநாடு செல்வீங்க! போட்டியில் வெல்வீங்க!

குடும்பத்தினர் மீது பாசமிக்க மேஷ ராசி ... மேலும்
 
temple
பிரிந்த குடும்பம் சேருது! தொழிலில் லாபம் கூடுது!

தன்னம்பிக்கையுடன் செயல்படும் ரிஷப ராசி ... மேலும்
 
temple
புத்தி கூர்மையுடன் பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

பணமழை பொழியும்! பொன், பொருள் ... மேலும்
 
temple
கடமையில் கண்ணாக இருக்கும்கடக ராசி அன்பர்களே!

கொஞ்சம் அலைச்சல் கொள்ளை ஆதாயம்

குரு பகவான் 3-ம் ... மேலும்
 
temple
வெற்றி சிகரத்தை குறிக்கோளாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

வளர்ச்சி வந்தாச்சு! வசந்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.