Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆடம்பர வாழ்வு மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! ரிஷபம்: உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018)
மேஷம்: நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
14:54

நிம்மதிக்கு தேவை ஆன்மிக வழிபாடு

இந்த மாதம் ராசிக்கு 11ம் இடத்தில் கேது இருப்பதால் நன்மை அதிகரிக்கும். செவ்வாய் ராசிக்கு 2ம் வீட்டில் இருப்பது சாதகமற்ற இடம் என்றாலும் அவர் ராசிநாதன் என்பதால் கெடுபலன் உண்டாகாது.  ராசிக்கு 12ல் புதன், சுக்கிரன் இணைந்து இருப்பது சுமாரான பலனைத் தரும். சூரியனால்  வீண் அலைச்சல், சோர்வு ஏற்படலாம். ஆன்மிக வழிபாட்டால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பொருளாதார வளம் சிறக்கும். முயற்சியில் குறுக்கிட்ட தடை  ஏப்.26க்கு பிறகு  மறையும். ஏப்.26,27ல் பெண்களால் நன்மை உண்டாகும்.  பொன், பொருள் சேரும்.  ஏப்.21, 22,23ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே 2,3ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.  ராகுவால் மனைவி, மக்கள் மத்தியில்  குழப்பம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய வியாபார முயற்சி இப்போதைக்கு வேண்டாம். முக்கிய பொறுப்புகளை யாரையும் எளிதில்  நம்பி ஒப்படைக்க வேண்டாம். ஏப்.24,25,28,29ல் பண விரயம் உண்டாகலாம். ஆனால் மே 7,8ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.  செவ்வாயால் அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஏப்.26க்கு பிறகு புதனால் சிலர் தொழில் விஷயமாக ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். சூரியனால் உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம்.

பணியாளர்கள் அலைச்சல், பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். அதற்குரிய வருமானம் கிடைக்கப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.  ஏப்.26க்கு பிறகு பணி,
இடமாற்றம் கிடைக்கும். ஏப்.19,20 சிறப்பான நாட்களாக அமையும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்களுக்கு சுக்கிரனால் தடை ஏற்படலாம்.  புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் புதன் சாதகமற்று இருப்பதால்  சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் குருவின் பார்வை சிறப்பாக அமைந்துள்ளதால் கல்வியில் பின்னடைவு ஏற்படாது. பெற்றோர் அறிவுரையை ஏற்பது நல்லது. விவசாயிகள் சோளம், எள்,கரும்பு, பழ வகைகள் ஆகியவற்றில்  நல்ல மகசூல் பெறுவர்.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.
            
பெண்கள் நிம்மதியுடன் வாழ்வர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஏப்.30, மே 1ல் எதிர்பார்ப்பு நிறைவேறும்.  சகோதரிகளால் உதவி கிடைக்கும். செவ்வாயால்  வேலைக்கு செல்லும் பெண்கள் ஏப்.26ந் தேதி வரை சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.            

நல்ல நாள் : ஏப்.19,20,21,22,23,26,27,30 மே 1,7,8,9,10      
கவன நாள் : ஏப்.14,15,16, மே 11,12,13ல் சந்திராஷ்டமம். இந்த நாட்களில் வீண் விவாதங்களை தவிர்த்து வழிபாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.             
அதிர்ஷ்ட  எண் :  5,7  நிறம் :  சிவப்பு, வெள்ளை

பரிகாரம்: ராமருக்கு அர்ச்சனை.  சதுர்த்தியன்று விநாயகருக்கு விளக்கு.

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018) »
temple
மற்றவருக்கு உதாரணமாக திகழும் மேஷ ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 7-ம் இடத்தில்   அமர்ந்து ... மேலும்
 
temple
பிறரை குறை கூற விரும்பாத ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து சாதகபலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மற்றவர் நலனில் அக்கறை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு  5-ல் இருக்கும் குரு பகவானும், 11-ல் ... மேலும்
 
temple
மனித நேயமுடன் நடக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் வளர்ச்சிக்கான சூழ்நிலை ... மேலும்
 
temple
சிந்தனையால் தூயவாழ்வு நடத்தும் சிம்ம ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் அதிக நன்மை உண்டாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.