Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே! மேஷம்: நட்புக்கு முன்னுரிமை ... மிதுனம்: மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே! மிதுனம்: மதிநுட்பத்தால் வெற்றி ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018)
ரிஷபம்: உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
14:55

எதிர்பார்ப்பு நிறைவேறும்

உங்கள் ராசிக்கு குரு 5ம் இடத்தில் இருந்து சாதக பலனை வாரி வழங்குவார். 11ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை அளிப்பார். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதன் ஏப்.26 வரை 11ம் இடத்தில் இருப்பதால்  பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்களால் மேன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.  ஏப்.24,25ல் உறவினர்  வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரத்தில் மே 4,5,6ல் அவர்களால் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. குருவின் பார்வை பலத்தால் பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். மே 2,3ல் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும்.          

தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகத்திலும் வருமானம் அதிகரிக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் நிர்வாக செலவு அதிகரிக்கும். மறைமுகப்போட்டியும் அவ்வப்போது குறுக்கிடலாம். ஏப்.26,27,30, மே1ல் வீண் குழப்பம் ஏற்படலாம். இந்நாட்களில் முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மே 9,10ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். அரசாங்க வகையில் சலுகை கிடைக்கும்.             

பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் சிறப்பான பலனை காணலாம். அதிகாரிகளின் ஆதரவு  நல்ல முறையில் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தியளிக்கும். ஏப்.26க்கு பிறகு மேல் சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு அல்லது தற்காலிக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். ஏப்.21,22,23ல் பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த முயற்சியில் தடை, மறைமுகப்போட்டி  முதலியன மறையும். சக பெண் கலைஞர்களின் உதவி கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ப நற்பலன் கிடைக்கப் பெறுவர். தொண்டர் வகையில் பணம் செலவழிக்க நேரிடும். அரசியல்ரீதியாக திடீர் பயணம் உண்டாகும்.             

மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆனால் ஏப்.26க்குப் பிறகு படிப்பில் விடாமுயற்சி தேவைப்படும். விவசாயிகள் நெல், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தற்காலிகமாக தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில்  மெத்தனம் வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். தடைபட்ட  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி விரைவில் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் உயர்ந்த நிலை காண்பர். ஏப்.26க்கு பிறகு பணிச்சுமை அதிகரிக்கலாம். பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது.  சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி நிதியுதவி மூலம் மூலதனத்தை அதிகப்படுத்துவர்.  ஏப்.14,15,16, மே 11,12,13ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். பிறந்த வீட்டினரின் உதவி கிடைக்கும்.சகோதரிகள்  ஆதரவுடன் செயல்படுவர்.  செவ்வாயால் அண்டை வீட்டாரால் தொல்லை உண்டாகலாம்.             

நல்ல நாள் :  ஏப். 14,15,16,21,22,23,24,25,28,29, மே 2,3,9,10,11,12,13            
கவன நாள் : ஏப். 17,18, மே 14 சந்திராஷ்டமம் இந்த காலத்தில் வீண் விவாதத்தை தவிர்த்து
வழிபாட்டில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது அவசியம்.             
அதிர்ஷ்ட எண் : 3,8  நிறம் : மஞ்சள், வெள்ளை

பரிகாரம்: வெள்ளியன்று லட்சுமி    வழிபாடு. சனியன்று பெருமாளுக்கு அர்ச்சனை.

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018) »
temple
நட்புக்கு முன் உதாரணமான மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து நன்மையை ... மேலும்
 
temple
துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் ... மேலும்
 
temple
மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.