Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ... கடகம்: கடமையில் ஆர்வமுடன் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே! கடகம்: கடமையில் ஆர்வமுடன் ஈடுபடும் ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
மிதுனம்: மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
02:04

இல்லம் நோக்கி இனிய செய்தி

இந்த மாதம் 3ல் ராகுவும், 6ல் சனியும், 11ல் சூரியனும்  இருப்பதால் நன்மை அதிகரிக்கும். புதன் ஏப்.27ல்  இடம் மாறினாலும் மாதம் முழுவதும் சாதகமான பலன் உண்டாகும். பெண்களின் ஆதரவால் பொன், பொருள் சேரும்.  ஏப்.26க்கு பிறகு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். சூரியனால் சமூக மதிப்பு உயரும். அரசு வகையில்  நன்மை கிடைக்கும்.  குடும்பத் தேவை அனைத்தும்  நிறைவேறும்.  கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க யோகமுண்டு. விருந்து, விழா என அடிக்கடி சென்று மகிழ்வீர்கள்.  ராகுவால் எதிர்பார்த்த சுபசெய்தி  வீடு தேடி வரும்.  ஏப்.26,27ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம்  மே 7,8ல் அவர்களின்  வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.  ஏப்.30, மே 1ல் சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  பயணத்தின் போது சற்று கவனம் தேவை. கடந்த காலத்தில் செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ண வியாதிகள் மறையும்.  உடல்நிலை சீராகும்.       

தொழில், வியாபாரத்தில்  நல்ல வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்ததை விட ஆதாயம் பல மடங்கு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கு சாதகமான காலமாக அமையும்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். ஏப்.28,29, மே 2,3ல் சந்திரனால் சிறு தடைகள் உருவாகலாம். இந்த நாட்களில் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதை தவிர்க்கவும்.  ஏப்.14,15,16, மே 11,12,13ல் எதிர்பாராத வகையில்  திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.       

பணியாளர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கை விரைவில் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். இடமாற்ற பீதி மறையும். ராகு சாதகமாக உள்ளதால் வேலைப்பளு ஏற்பட்டாலும் அதற்கான வருமானம் குறைவின்றி கிடைக்கும்.  ஏப்.24,25  சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் மறைமுகப்போட்டியைச் சந்திக்க நேரிடும். புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். சக பெண்கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.  அரசியல்வாதிகள்  பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபட நேரிடும். மே 9,10ல் தொண்டர் வகையில்  பணம் செலவழிக்க நேரிடும்.
      
மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை மறையும். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும்.  ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி முன்னேறுவர். போட்டியில் பங்கேற்று வெற்றி கிடைக்கப் பெறுவர். விவசாயிகள் போதிய மகசூலைப் பெறுவர். ஆனால்,  உழைப்பை அதிகம் சிந்த வேண்டியது இருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க மாத முற்பகுதியில் வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.      

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விரும்பிய ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் நற்பலன் காண்பர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.   ஏப்.17,18, மே 14 ஆகிய நாட்களில் சிறப்பான பலன் உண்டாகும்.  உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்வர். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். மே 4,5,6ல் புத்தாடை, அணிகலன் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம்.

நல்ல நாள் : ஏப்.14,15,16,17,18,24,25,26,27, 30, மே 1,4,5,6,11,12,13,14      
கவன நாள் : ஏப்.19,20  சந்திராஷ்டமம். இந்த காலத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து
வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை. உறவினர் வகையில் நிதானத்தை பின்பற்றவும்.        
அதிர்ஷ்ட எண் :  2,3,9 நிறம் : சிவப்பு, பச்சை

பரிகாரம்: பவுர்ணமியன்று அம்மன் வழிபாடு. வியாழனன்று குரு பகவானுக்கு நெய் தீபம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar