Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: துணிச்சலுடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே! சிம்மம்: துணிச்சலுடன் செயலாற்றும் ... துலாம்: பெருந்தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே! துலாம்: பெருந்தன்மை கொண்ட துலாம் ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018)
கன்னி: பெற்றோர் மீது பேரன்பு கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
14:59

அதிர்ஷ்டவசமாக அதிக ஆதாயம்

இந்த மாதத்தின் பிற்பகுதி சிறப்பானதாக அமையும். புதன் ஏப்.27ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். 3ல் உள்ள சனி, 6ல் உள்ள கேது நற்பலன் வாரி வழங்குவர். கேதுவால் பணபலம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். குருவின் பார்வை பலத்தால் குடும்பத்தேவை பூர்த்தியாகும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியிடையே அன்பு மேலோங்கும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். அவர்களால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். இளைய சகோதரர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பீர்கள். மே 7,8ல் பெண்களால் உதவி கிடைக்கும். மே 2,3ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஏப்.17,18, மே 14ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. கடந்த காலத்தில்  இருந்த உடல்நலக்குறைவு இனி இருக்காது. நோயின் பிடியில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பீர்கள்.  வெளியூர் பயணத்தின் போது  கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிட்டாலும் வருமானம் சீராக கிடைக்கும். முக்கிய பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.  வரவு, செலவு கணக்கை சரியாக வைத்து கொள்வது நல்லது. அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். புதிய தொழில் முயற்சி இப்போதைக்கு தவிர்க்கவும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணம் செல்ல நேரிடும்.  ஏப்.21,22,23ல் அதிர்ஷ்டவசமாக  திடீர் ஆதாயம்  கிடைக்கும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியளிக்கும்.  அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.  விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும். வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வர்.  அரசு பணியாளர்களுக்கு விரும்பிய  இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.  ஏப்.30, மே1ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு சக கலைஞர்களால் சிரமம் உருவாகலாம். புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி கிடைக்காது. அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். தொண்டர்களின் ஆதரவைப் பெற பணம் செலவழிக்க நேரிடும். தலைமையின் சொல்லுக்கு மதிப்பளிப்பது நல்லது.  மாணவர்கள் பெற்றோரின் அறிவுரையை பின்பற்றி முன்னேறுவர். ஏப்.26க்கு பிறகு விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு  உண்டாகும்.  போட்டி, பந்தயத்தில் பங்கேற்று வெற்றி காண்பர். நண்பர்களின் உதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு  உழைப்பிற்கேற்ப வருமானம் கிடைக்கும். பணப்பயிர்களை தவிர்ப்பது நல்லது. கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். திட்டமிட்டபடி நவீன கருவிகள் வாங்குவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம்  தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.                                                                              

பெண்கள் கணவரின்  அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவர். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  பிள்ளைகளின் செயல்பாடு திருப்தியளிக்கும். உறவினர் வகையில் விருந்து, விழா என சென்று மகிழ்வர். ஏப்.26க்கு பிறகு  திருமணம் போன்ற
சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். விண்ணப்பித்த கோரிக்கை எளிதில் நிறைவேறும். பெற்றோர் வீட்டில் இருந்து பண உதவி கிடைக்கும்.  ஆன்மிக சுற்றுலா  செல்வீர்கள்.      
                                                                     
நல்ல நாள் : மார்ச் 14,15,16,21,22,23,24,25,30,  ஏப்.1,2,3,7,8,11,12,13                                                                              
கவன நாள் : ஏப். 26,27 சந்திராஷ்டமம்.                                                                           
அதிர்ஷ்ட எண் : 6,7
நிறம் : சிவப்பு, பச்சை  

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு. வியாழனன்று தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை.

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018) »
temple
நட்புக்கு முன் உதாரணமான மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து நன்மையை ... மேலும்
 
temple
துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் ... மேலும்
 
temple
மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.