Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: பெருந்தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே! துலாம்: பெருந்தன்மை கொண்ட துலாம் ... தனுசு: அனைவருக்கும் நல்லதை விரும்பும் தனுசு ராசி அன்பர்களே! தனுசு: அனைவருக்கும் நல்லதை ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)
விருச்சிகம்: எதையும் சாதித்து காட்டும் விருச்சிக ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
15:01

அதிகரிக்கும் வருமானம்

இந்த மாதம் முற்பகுதியில் சாதாரண பலன்களும், பிற்பகுதியில் அதிக பலனும் காணலாம். ஏப்.27-ல் புதன் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். 11-ம் இடத்தில் இருக்கும் குரு, 5-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் தொடர்ந்து நன்மை தருவர்.  சூரியன் மாதம் முழுவதும் நன்மைகளைத் தருவார். அவரது பலத்தால் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.  வருமானம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். ஏப்.26-வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், குடும்பத்தில் சில பிரச்னைகள் வரலாம். கணவன், -மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குடும்பப் பெரியோர்களின் ஆலோசனை உறுதுணையாக இருக்கும். அதன் பிறகு எடுத்த செயல் வெற்றி அடையும்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஏப்.19,20-ல்  உறவினர் வகையில், கருத்து வேறுபாடு வரும் என்பதால் சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் மே 7,8-ல் அவர்களால் நன்மை நடக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபத்துக்கு குறை இருக்காது. எந்த துறையில் இறங்கினாலும், அபார துணிச்சலுடன் பணிபுரிவீர்கள். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் 26-க்கு பிறகு வீடு திரும்புவர். ராகுவால் பெண்கள் வகையில் இடையூறு வரலாம். ஏப்.17,18, மே 9,10,14-ல் கல்லாப்பெட்டி உங்கள் கைக்குள் இருப்பது நல்லது. ஏப்.26,27-ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் குருவால் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இருப்பினும் புதன் ஏப்.26- வரை சாதகமற்ற  இடத்தில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஏப்.26க்கு பிறகு அதிகாரிகளின்  ஆதரவு  கிடைக்கும்.  கோரிக்கைகள் நிறைவேறும். மே 4,5,6-ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.  நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள்
கவனமாக இருக்க வேண்டும்.

கலைஞர்கள் நல்ல பலனை எதிர்நோக்கலாம். புகழ், பாராட்டு வந்து சேரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காணமுடியும். ஏப்.24,25ல், எந்தக் கட்சியில் இருப்பது என்ற மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் குருவால் சிறப்பான பலனை காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். இருப்பினும் மாதத் தொடக்கத்தில் சிரத்தை எடுத்து படியுங்கள். ஏப்.26-க்கு பிறகு முன்னேற்ற பாதையில் செல்லலாம். போட்டித் தேர்வுகளில் வெற்றி காணலாம். விவசாயிகள் நல்ல வருமானம் பெறுவர். பழம், பயறு வகைகளில் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது அரிது. வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். பெண்கள் தோழிகளின் அனுசரணையுடன் இருப்பர். மகிழ்ச்சி அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம். வெளியூர் செல்லும் நிலை வரும். ஏப்.26-க்கு பிறகு கணவரின் அரவணைப்பு கிடைக்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஏப்.19,20-ல் புத்தாடை, நகை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். பொருளாதார வளம் மேம்படும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

நல்ல நாள் : ஏப்.14,15,16,19,20,26,27,28,29 மே 4,5,6,7,8,11,12,13
கவன நாள் : ஏப்.30, மே 1- சந்திராஷ்டமம். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து
இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட எண் :- 3,9  நிறம் :- மஞ்சள், சிவப்பு

பரிகாரம்:  சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம். வெள்ளியன்று துர்க்கை வழிபாடு.

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்
 
temple
மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்
 
temple
பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்
 
temple
மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.