Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
தனுசு: அனைவருக்கும் நல்லதை விரும்பும் தனுசு ராசி அன்பர்களே! தனுசு: அனைவருக்கும் நல்லதை ... கும்பம்: எதற்கும் கலங்காத குணமுள்ள கும்ப ராசி அன்பர்களே! கும்பம்: எதற்கும் கலங்காத குணமுள்ள ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018)
மகரம்: நல்ல உள்ளம் படைத்த மகர ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
15:03

குவா குவா பாப்பா உங்க வீட்டில் பிறப்பா!

உங்கள் எண்ணம் ஈடேற இம்மாதம் உறுதுணையாக அமையும். 11-ம் இடத்தில் இருக்கும் சனி, 9-ம் இடத்தில் இருக்கும் குரு, 3-ம் இடத்தில் உள்ள சுக்கிரன் ஆகியோரின் பக்க பலத்தோடு பல்வேறு நன்மைகளை தற்போது கண்டு கொண்டிருக்கிறீர்கள். மேலும் புதன் ஏப்.26-க்கு பிறகு சாதகமான பலனை கொடுப்பார். பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டங்களில் எந்தவித பின்னடைவும் ஏற்படாது. துரிதமாக எதையும் செய்து முடித்து பலன் பெறலாம். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை சிறப்படையும். வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது.  பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.  வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். பொன், பொருள் வாங்கலாம்.  பெண்கள் மிக உறுதுணையாக  இருப்பர்.   ஏப்.19,20-ல் அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.14,15,16 மே11,12,13ல்  உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஏப்.26, 27-ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். அப்போது  சற்று விலகி இருக்கவும்.                                    

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சிறப்பான மாதம். சிலர் தங்கள் வணிகத்தை வெளிநாடு வரை விரிவுபடுத்த யோகம் உண்டு. சேர்க்கை சகவாசத்தால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து  விடுபடுவர். ஏப்.30, மே1-ல்  எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆனால் ஏப்.17,18,21,22,23, மே 14-ல் நிறுவனத்தை உங்கள் நேரடி பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. போட்டியாளர்கள் வகையிலும், அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு  ஏப்.26-க்கு பிறகு மறையும். பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியது இருக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும், சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் சமாளித்து விடுவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில்  செல்வாக்கு அதிகரிக்கும். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர். எதிர்பார்த்த  கடன் எளிதில் கிடைக்கும். மே 9,10- சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள் உற்சாகமான பலனை காண்பர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  அரசியல்வாதிகளுக்கு பதவி விஷயத்தில் மனதில் சோர்வு ஏற்படும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்காது. ஆனால் பணவரவுக்கு பஞ்சமில்லை. மாணவர்கள் மாத ஆரம்பத்தில் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகளுக்கு  கால்நடை வகையில் செல்வம் பெருகும்.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். பெண்கள் உற்சாகமாக இருப்பர். திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். கணவருடன் ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. ஏப்.24,25-ல் புத்தாடை, -நகை வாங்கலாம். சகோதரிகளால் பணம் கிடைக்கும். ராகுவால்  சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.        

நல்ல நாள் : ஏப்.14,15,16,19,20,24,25,30,
மே 1,2,3,9,10,11,12,13.       
கவன நாள் : மே 4,5,6- சந்திராஷ்டமம், இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து
இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.                                    
அதிர்ஷ்ட எண்- : 3,5   நிறம் :- வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:  தினமும் காலையில் சூரிய தரிசனம். சனியன்று நரசிம்மருக்கு அர்ச்சனை.

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018) »
temple
நட்புக்கு முன் உதாரணமான மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து நன்மையை ... மேலும்
 
temple
துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் ... மேலும்
 
temple
மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.