Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: நல்ல உள்ளம் படைத்த மகர ராசி அன்பர்களே! மகரம்: நல்ல உள்ளம் படைத்த மகர ராசி ... மீனம் : எதிர் நீச்சல் போடும் குணமுள்ள மீன ராசி அன்பர்களே! மீனம் : எதிர் நீச்சல் போடும் குணமுள்ள ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)
கும்பம்: எதற்கும் கலங்காத குணமுள்ள கும்ப ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
15:04

வேலைக்காக வெளியூர் போவீங்க!

இந்த மாதம் 2-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரனும், 3-ம் இடத்தில் இருக்கும் சூரியனும் நற்பலன் தருவர்.  மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. சுக்கிரன், சூரியன் சாதகமாக காணப்படுவதால் பல்வேறு திட்டங்களையும் கச்சிதமாக முடிப்பீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். வெளியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். ஏப்.21,22,23-ல் குடும்பத்துடன் விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.17,18 மே 14-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். மாத முற்பகுதியில் புதன் 2-ம் இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். பொது விஷயங்களில் ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலை வரலாம். கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்துப் போகவும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஏப்.26 வரை லாபம் சிறப்பாக இருக்கும். அரசின் சலுகை, வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். ஏப்.26-க்கு பிறகு போட்டியாளர்களால் பிரச்னை வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஏப்.19,20,24,25-ல் கல்லாப்பெட்டி உங்கள் கண்காணிப்பில் இருக்கட்டும். செவ்வாயால் வேண்டாதவர்களுடன் சேரவும், சனி பகவானால் பெண்கள் வகையில் இடையூறும் வரலாம். இந்த நாட்களில் கவனமாக இருக்கவும். மே 2,3-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறை முறியடிக்கும் வல்லமை ஏற்படும்.

பணியாளர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் இருந்தால் முன்னேற்றம் காணலாம். திடீரென வேறு துறைக்கு மாறிச் செல்லும் நிலை வரலாம். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் எளிதில் கிடைக்கும். வழக்கமான சலுகைகளில் மாற்றம் வரலாம். ஏப்.14,15,16 மே11,12,13 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும் குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் தங்கும் நிலை வரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று சிறப்பு நிலை அடைவர். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். ஏப்.30, மே1ல் எதிர்காலம் தொடர்பாக மனக்குழப்பம் ஏற்படலாம்.  மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்zயிருக்கும். ஆனால் குருவின் 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். ஆசிரியரின் அறிவுரை மூலம் முன்னேற வழி காணலாம். விவசாயிகளுக்கு நெல், கோதுமை, சோளம், கேழ்வரகு, பயறு, பழ வகைகள் நல்ல வருவாயைக் கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். சொத்து வாங்க  சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு தள்ளிப்போகும். ஆனால் பாதகமான முடிவு வராது.                                          

பெண்கள் கணவருடன் விட்டுக்கொடுத்து போகவும். குருவின் 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் துணிச்சலாக எதையும் சமாளித்து விடுவீர்கள். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். அக்கம் பக்கத்தவர் சதி
உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ஏப்.26,27-ல் புத்தாடை, நகை வாங்கலாம்.   பொருளாதார வளம் மேம்படும்.                                            

நல்ல நாள்: -ஏப்.14,15,16,17,18,21,22,23,26, 27, மே 2,3,4,5,6,11,12,13,14
கவன நாள் : மே 7,8- சந்திராஷ்டமம். இந்த
நாட்களில் பண விஷயத்திலும், குடும்ப
பிரச்னைகளில் பொறுமையும் காட்டினால் நன்மை நடக்கும்.                                          
அதிர்ஷ்ட  எண்- : 7,9   நிறம் :- வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:  சனியன்று பெருமாளுக்கு அர்ச்சனை. ராகு காலத்தில் ராகுவுக்கு பாலாபிஷேகம்.

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்
 
temple
மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்
 
temple
பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்
 
temple
மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.