Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கும்பம்: எதற்கும் கலங்காத குணமுள்ள கும்ப ராசி அன்பர்களே! கும்பம்: எதற்கும் கலங்காத குணமுள்ள ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை பரணி 1 பாதம்).. சொந்த வீடு வாங்குவீங்க! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை பரணி ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018)
மீனம் : எதிர் நீச்சல் போடும் குணமுள்ள மீன ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
15:06

பணவரவில் பெரும் வளர்ச்சி

உங்களுக்கு கடந்த மாதத்தை போன்றே நற்பலன்கள் கிடைக்கும். 6ம் இடத்தில் இருக்கும் ராகு, 7-ம் இடத்தில் இருக்கும் குரு மற்றும் செவ்வாய், சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் தருவர். பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். பணவரவில் பெரும் வளர்ச்சி ஏற்படும். புதிய வீடு, -மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். வெளியிடத்தில் செல்வாக்கு மேம்படும்.  தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகளால் குதுாகலம் ஏற்படும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்வீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.24,25ல் பெண்கள் மூலம் நன்மை உண்டு. ஏப்.19,20-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவியும் கிடைக்கும். அதே நேரம், ஏப்.30, மே1-ல் அவர்கள் வகையில் விரோதம் வரலாம். இந்நாட்களில் உறவுகளிடம் ஒதுங்கி இருப்பது நல்லது. புதனால் ஏற்பட்ட நண்பர்கள், கணவன், மனைவி வகையில் கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு, வீட்டு பிரச்னைகள் போன்ற இடர்பாடுகள் ஏப்.26-க்கு பிறகு முழுமையாக மறையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.   பெண்களைப் பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்தில் அதிக வருவாயை பெறலாம். திருட்டு, களவு பயம்  இருக்காது. ஏப்.21,22,23,26,27-ல் பணவரவு செலவை நீங்களே நேரடியாகக் கண்காணிப்பது விரயத்தைத் தடுக்கும். மே4,5, 6-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சனி பகவானால் போட்டியாளர்களின் இடையூறு தலைதுாக்கினாலும், ராகுவால் அதை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். பணியாளர்கள் சில சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்கலாம். சக  ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் கோரிக்கைகளை மாதம் முழுவதுமே அதிகாரிகளிடம் வைக்கலாம் என்றாலும், ஏப்.17,18  மே 14- மிகச் சிறப்பான நாட்களாக அமையும்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் வேலைப் பளுவை சுமக்க வேண்டியிருக்கும்.  இடமாற்ற பீதி மறையும். கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிறப்பான வருமானம் இருக்கும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு  எதிர்பார்த்த பதவி, புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டி
முன்னேறுவர்.  ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று சிறந்த கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பைப் பெறலாம். விவசாயிகள் அதிக மகசூல் பெறுவர். கோதுமை, கேழ்வரகு, சோளம் நல்ல வருமானம் தரும். பால் வியாபாரம் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். திருமணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து முடியும். கணவரின் அன்பு கிடைக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். ஏப்.28,29-ல் புத்தாடை-, நகை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும்.  மே 7,8-ல் விருந்து, விழா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தோழிகளால் பணஉதவி கிடைக்கும்.

நல்ல நாள் : -ஏப்.17,18,19,20,24,25,28,29
மே 4,5,6,7,8,14.                                          
கவன நாள்: மே 9,10- சந்திராஷ்டமம், இந்த காலத்தில் புதிய முயற்சி செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் வரும் சிரமங்களில் இருந்து தப்பலாம்.                                           
அதிர்ஷ்ட எண் -: 3,5 நிறம் : -சிவப்பு, வெள்ளை

பரிகாரம்:  சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம். ராகு காலத்தில் பைரவர் வழிபாடு.

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018) »
temple
நட்புக்கு முன் உதாரணமான மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து நன்மையை ... மேலும்
 
temple
துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் ... மேலும்
 
temple
மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.