Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இக்ஷவாகு வம்சத்தில் ராமர் எத்தனையாவது தலைமுறை தெரியுமா? இக்ஷவாகு வம்சத்தில் ராமர் ... தமிழ்ப்புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய கனிகள்! தமிழ்ப்புத்தாண்டில் பூஜை அறைகளில் ...
முதல் பக்கம் » துளிகள்
தமிழ்ப்புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
18:26

தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம் (ஏப்ரல் 14) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம் இது. தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர்.

கேரளாவில் சித்திரை விஷுவன்று கனி காண்பது மரபு. பங்குனி கடைசி நாள் அன்று இரவு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூச்சூடுவர். கோலமிட்ட மனைப்பலகையில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து இருபுறமும் குத்துவிளக்கு வைப்பார்கள். ஒரு தாம்பளத்தில் பூ, பழம், வெற்றிலைபாக்கும், இன்னொன்றில் கிண்ணங்களில் அரிசிபருப்பு, தங்க, வெள்ளிக் காசுகள், ஆபரணங்களும் வைப்பர். இன்னொரு தாம்பளத்தில் முக்கனிகளை வைப்பர். செவ்வாழை, நேந்திரம் வாழை, பலாப்பழம், கொன்றைப் பூச்சரம், தென்னம் பூ கொத்தும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து பூஜை அறைக்கு வந்து குத்துவிளக்கேற்றுவார். சுவாமியை வணங்கியபின் வீட்டில் உள்ளவர்களை வயதுப்படி கண்மூடிவரச் செய்து பூஜை அறையில் கண்திறந்து காண வைப்பதுதான் விஷூக்கனி காணல். பின் எல்லாருக்கும் காசு தருவார். இதை கை நீட்டம் என்பர். பின், அவரிடம் ஆசி பெறுவர். நீராடியபின் புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தபின் அறுசுவை உணவு உண்பர்.

குருவாயூர் கோயிலுக்கு முதல் நாள் இரவே சென்று காத்திருந்து அதிகாலை நடைதிறந்ததும் குருவாயூரப்பனைத் தரிசிப்பார்கள். ஆலயத்தில் கை நீட்டப் பணம் தருவதை ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி வாங்கிச் செல்வர்.

 
மேலும் துளிகள் »
temple
ஆடை காணிக்கை - தெய்வங்களுக்கு அளிக்கப்படும் புடவை, வஸ்திரம் போன்றவை குலதெய்வ தோஷத்தை நீக்கும்; ... மேலும்
 
temple
லட்சுமி, நம் வீட்டுக்கு வரமாட்டாளா என்ற ஏக்கம் பலருக்கு உண்டு. ஆனால், அவள், பூலோகத்தில் தானாகவே ... மேலும்
 
temple
நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாயின் அருள் இருந்தால் சொத்து சேரும். அவருக்குரிய போற்றியை தினமும் படிக்க, ... மேலும்
 
temple
அதர்மம் தலையெடுக்கும் போது தர்மத்தை நிலைநாட்டுபவர் விஷ்ணு. இவரது  கையிலுள்ள ஆயுதம் சக்கரத்தையே ... மேலும்
 
temple
மன்னர் பிட்டிதேவராயரை சமண மதத்தில் இருந்து வைணவத்திற்கு மாற்றியவர் ராமானுஜர். விஷ்ணு மீது கொண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.