மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட், லோயர் டிவிஷனில் கன்னியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விரதமிருந்த தொழிலாளர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.