மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2017 10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை காலை 9:50 மணிக்கு மேல் காலை 10:14 மணிக்குள் நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.,27) வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. கொடியேற்றம் நாளை நடக்கிறது. மே 5ல் இரவு 6:55 மணிக்கு மேல் இரவு 7:19 மணிக்குள் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம். மே 6ல் மீனாட்சி அம்மன் திக்குவிஜயம். மே 7 ல் காலை 8:35 மணிக்கு மேல் காலை 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். மே 8 ல் காலை 6:00 மணிக்கு திருத்தேரோட்டம் வடம் பிடித்தல் நடக்கிறது. திருக்கல்யாண சிறப்பு கட்டண தரிசன விபரம் ஓரிரு நாளில் வெளியாகும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.