Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : எதிர் நீச்சல் போடும் குணமுள்ள ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2).. குடும்பத்தில் குதூகலம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை பரணி 1 பாதம்).. சொந்த வீடு வாங்குவீங்க!
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை பரணி 1 பாதம்).. சொந்த வீடு வாங்குவீங்க!

பதிவு செய்த நாள்

13 மே
2017
04:05

பெற்றோர் மீது அன்பு மிக்க மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம்  கேது,  ராசிக்கு 11ம் இடத்தில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். செவ்வாய் மே 27ல் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறியும்,   சுக்கிரன் மே 31ல் மீனத்தில் இருந்து மேஷத்திற்கு மாறியும் நற்பலன் வழங்குவர். ரிஷபத்தில் உள்ள சூரியன், சனி, ராகு, குரு ஆகியோரால் ஓரளவே  நற்பலன் கிடைக்கும். செவ்வாயால் பக்தி எண்ணம் மேம்படும்.  புதிய வீடு, வாகனம் வாங்க நல்ல நேரம் கூடி வரும்.

புத்தாடை, நகை வாங்கும் யோகமுண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும். மாத பிற்பகுதியில்  பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.மாதத் தொடக்கத்தில் கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு  உருவாகலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு உண்டாகாது. மே13ல் புதன் இடம் மாறிய பின் நிலைமை சீராகும்.

மே 23,24ல் நண்பர்களால் உதவி கிடைக்கும். மே 19,20 ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே 30,31 ல்  அவர்கள் வகையில் வீண் விரோதம் வரலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. கண் நோய் வரலாம். மே 15 ஜூன் 1,2,10,11, 12ல்  வயிறு தொடர்பான உபாதை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிட்டாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை உண்டாகாது.  

முதலீட்டை அதிகப்படுத்தவோ,  விரிவாக்கம் செய்யவோ வேண்டாம். மே 27க்கு பிறகு தொழில் ரீதியாக அலைச்சல் அதிகரிக்கும்.  மே31க்கு பிறகு  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். மே 21, 22, 25, 26ல் சிறு தடைகளை சந்திக்கலாம். ஜூன் 3,4 ல்  எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். ஜூன் 12க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

எனவே வரவு,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் செயல்படவும். ஜூன் 11,12ல் முன்னேற்றமான சம்பவம் நடக்க வாய்ப்புண்டு. மே 26க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.

கலைஞர்களுக்கு மே 31க்கு பிறகு புகழ், வருமானம் அதிகரிக்கும். அதுவரை விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் மே 26க்கு பிறகு  நல்ல  வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் கடந்த காலம் போல மெத்தனமாக இருக்க வேண்டாம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் காணலாம். மே 26 க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம்  கைகூடும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.  கைவிட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்கும். பெண்களால் குடும்பத்திற்கு பெருமை  சேரும்.  மே 30 க்கு பிறகு  உங்களை புரிந்து கொள்ளாதவர் கூட, உங்களின் மேன்மை அறிந்து சரணடைவர்.  மே 27,28,29ல் ஆடை, ஆபரணம் சேரும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம்.  ஜூன் 5,6,7 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள்.

பரிகாரம்:
* சனிக்கிழமையில் பெருமாளுக்கு அர்ச்சனை
* கார்த்திகையன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
* சுவாதியன்று நரசிம்மருக்கு நெய் தீபம்

நல்ல நாள்: மே 16, 17, 18, 19, 20, 23, 24,27,28,29 ஜூன் 3,4,5,6,7,13,14.
கவன நாள்: ஜூன் 8,9 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட  எண்: 6,7  நிறம்: சிவப்பு, வெள்ளை

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar