Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்).. ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2).. எதிர்பார்ப்பு நிறைவேறும் கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1).. அதிர்ஷ்டவசமாக சொத்து
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1).. அதிர்ஷ்டவசமாக சொத்து

பதிவு செய்த நாள்

13 மே
2017
04:05

தைரியசாலியாக விளங்கும் சிம்ம ராசிஅன்பர்களே!

இந்த மாதம் 2ல் இடத்தில் இருக்கும் குரு, 10ம் இடத்தில்  இருக்கும் சூரியன் நன்மை தர காத்திருக்கின்றனர். மே 31ல் சுக்கிரன், மீனத்தில் இருந்து ÷ மஷத்திற்கு மாறினாலும், மாதம் முழுவதும் நற்பலன் தருவார். மே 27க்கு பிறகு புதன் 10ம் இடத்திற்கு மாறியும், செவ்வாய் 11ம் இடத்திற்கு மாறியும் நன்மை தொடர்ந்திடும்.  4ல் உள்ள சனி,  7ல் இருக்கும் கேது,12ல் இருக்கும் ராகு ஆகியோரால் சுமாரான பலனே கிடைக்கும்.   குரு பகவான் 2ம் இடத்தில் இருப்பதால் மனதில் துணிச்சல் மேலோங்கும். வருமானம் அதிகரிக்கும்.

வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் சூழ்நிலை உருவாகும். சூரியனால் புதிய முயற்சி  சிறப்பாக முடியும். சமூகத்தில் மதிப்பு உயரும். செவ்வாய் மே 26 வரை 10ம் இடத்தில் இருப்பதால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். வீண் விரயம் ஆகலாம். ஆனாலும் அதை சரி கட்டும் விதத்தில் வருமானம் வந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தில் ஆடம்பர வசதி பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். மே 27 க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் பெண்களால் நன்மை  அதிகரிக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை அடியோடு மறையும்.

பிரிந்திருந்த குடும்பம்  ஒன்று சேரும். ஜூன் 1,2 ல் சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே 27,28,29 ல்  விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.  ஜூன் 8,9 ல் உறவினர் வகையில் கருத்து  வேறுபாடு உருவாகும். சற்று ஒதுங்கி இருக்கவும். மே 26க்கு  பிறகு அதிர்ஷ்டவசமாக  வீடு, மனை என சொத்து வாங்கும் யோகம் ஏற்படும்.  உடல்நிலையில் கவனம் தேவை. உஷ்ணம், தோல், தொடர்பான நோய்  மே 26 க்கு பிறகு மறையும். பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும். தொழில், வியாபாரத்தில் லாபத்திற்கு  குறைஇருக்காது. உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்தில் அதிக வருமானம் காணலாம். அதே நேரம் மே 30,31 ஜூன் 3,4ல் சந்திரனால் தடை குறுக்கிடலாம்.  மே 16,17,18 ஜூன் 13,14ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஜூன் 13 க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து மே 27க்கு பிறகு விடுபடுவர். கோரிக்கைகள்  அனைத்தும் நிறைவேறும். சக ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.  மே 25,26 ல் பணியிடத்தில் இனிய அனுபவம் உண்டாகும். அதிகாரம் கொடி கட்டி பறக்கும். மே 26க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காணலாம்.

கலைஞர்கள்  புதிய ஒப்பந்தம் எளிதில்  கிடைக்கப் பெறுவர். பொது நல சேவகர்கள், அரசியல்வாதிகளுக்கு  முயற்சிக்கு தக்க முன்னேற்றம் உண்டாகும்.  அதேநேரம் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் ஏற்படாது. மே 26 க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மே 15, ஜூன்  10,11,12ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பர். மே 27க்கு பிறகு தீய நண்பர்களை விட்டு விலகுவர். உயர் வகுப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர்  வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு பெறுவர். விவசாயிகள்  உழைப்புக்கேற்ப பலன் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அதிக  ஆதாயம் கிடைக்கும். பக்கத்து நிலத்தினர் வகையில் இருந்த பிரச்னை மறையும். மே 26க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம்  கைகூடும். வழக்கு, விவகார முடிவு சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருள் கிடைக்கும். பெண்களால் குடும்பம் உயர்ந்த நிலை அடையும். குடும்ப வாழ்வில் சந்தோஷம்  மேலோங்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். மே 26க்கு பிறகு பணிபுரியும்  பெண்கள் வேலையில்  திருப்தி அடைவர். பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுர்.  வியாபாரம் செய்யும்  பெண்களுக்கு சுக்கிரனால் லாபம் அதிகரிக்கும். ஜூன் 5,6,7 ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி வரப் பெறலாம்.

பரிகாரம்:
* சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
* சதுர்த்தியன்று விநாயகருக்கு விளக்கு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு

நல்ல நாள் : மே 16, 17, 18, 19, 20, 25, 26, 27, 28, 29, ஜூன் 1, 2, 5, 6, 7, 13, 14
கவன நாள்: மே 21,22 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,7,9  நிறம்: சிவப்பு, பச்சை

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar