Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2).. எதிர்பார்ப்பு நிறைவேறும் கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை).. கெட்டிமேளம் கொட்டப் போகுது விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (14.01.2018 - 12.2.2018)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, 1,2,3).. பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2017
16:44

பெரியவர்களை மதிக்கும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 7ல் உள்ள புதன் மே 27ல் 8ம் இடத்திற்கு  மாறுவதால் நன்மை அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் இருந்து  அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவார். அவரால் பொன்,பொருள் சேரும். மனதில் சந்தோஷம் நிலைத்திருக்கும். சகோதரர் உறுதுணையாக செயல்படுவர். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 10ம் இடத்துப் பார்வை சாதகமாக இருப்பதால் எந்த பிரச்னையையும்  எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுக்கிரன் மே 31ல் மீனத்தில் இருந்து 7ம் இடமான மேஷத்திற்கு செல்வதால் சுமாரான பலனே கிடைக்கும். மே 27க்குப் பின், புதனால் புதிய  முயற்சி வெற்றி பெறும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளின் நற்செயலால் பெருமை கொள்வீர்கள். மே 31க்குப் பிறகு பெண்களால் தொல்லை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

குடும்பத்தில் இருந்த பிரச்னை அனைத்தும் மே 26 க்கு பிறகு மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த குடும்பம்  ஒன்று சேரும். ஜூன் 5,6,7ல் நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  ஜூன் 1,2ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.  மே 16,17,18, ஜூன் 13,14ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். உடல் நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதை மே 26 க்கு பிறகு மறையும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். உழைப்புக்கேற்ப ஆதாயம் வரும். அரசாங்க  வகையில் பிரச்னை குறுக்கிடலாம். எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.  ஜூன் 3,4,8,9ல் சந்திரனால் சிறு தடைகள் ஏற்படலாம். மே 21,22ல் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஜூன் 12க்கு பிறகு  பணவிரயம் ஏற்பட வாய்ப்புண்டு. அறிமுகம் இல்லாதவர்களிடம் விழிப்புடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம்  வாக்குவாதம் செய்ய வேண்டாம்.  பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். ஆனால் அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் பணியாற்றுவது நல்லது.  மே 30,31 ல் பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். ஜூன் 12க்கு பிறகு வேலைப்பளு ஏற்படும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். பொறுமை காப்பது அவசியம்.

கலைஞர்களுக்கு  எதிரி தொல்லை, முயற்சியில் தடை  முதலியன மே 30க்கு பிறகு மறையும். ஆனால் பெண்கள் வகையில் திடீர் பிரச்னை உரு வாகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவர். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய பதவி  கிடைக்கும். மே 19,20ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். விடாமுயற்சி இருந்தால் போட்டிகளில்  வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு. ஜூன் 12க்கு பிறகு நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர்.  அக்கம்பக்கத்தினர் ஆதரவுடன் செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையில் நிம்மதியும், திருப்தியும் அடைவர்.  வியாபாரம் செய்யும்  பெண்களுக்கு  ராகுவால் லாபத்துக்கு குறைவிருக்காது.  மே15, ஜூன் 10,11,12ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம்.
மே 23,24ல் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழாவுக்கு சென்று வரும் வாய்ப்புண்டு.

பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய தரிசனம்
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
* வெள்ளியன்று லட்சுமிக்கு நெய்தீபம்

நல்ல நாள்: மே 15, 21, 22, 23, 24, 30, 31,ஜூன் 1, 2, 5, 6, 7, 10, 11, 12
கவன நாள்: மே 25,26 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 4, 5  நிறம்: மஞ்சள், பச்சை

 
மேலும் தை ராசி பலன் (14.01.2018 - 12.2.2018) »
temple
உதவும் குணமுள்ள மேஷ ராசி அன்பர்களே!

சூரியன் 10-ம் இடத்திற்கு வந்தும், குரு மாதம் முழுவதும், புதன் ... மேலும்
 
temple
வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து மாதம் முழுவதும் ... மேலும்
 
temple
பிறர் நன்மையை பெரிதென எண்ணும் மிதுன ராசி அன்பர்களே!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ... மேலும்
 
temple
நேசமும் பாசமும் மிக்க கடக ராசி அன்பர்களே!

அதிக உழைப்பையும் விடா முயற்சியையும் கொடுக்க வேண்டிய ... மேலும்
 
temple
கண்ணசைவில் காரியம் சாதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன் மற்றும்  கேது தரும் சிறப்பான பலனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.