Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, 1,2,3).. பிள்ளைகளால் பெருமை துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, 1,2,3).. ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1).. ஆன்மிக சுற்றுலா செல்வீங்க! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1).. ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை).. கெட்டிமேளம் கொட்டப் போகுது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2017
16:46

நற்செயலில் ஈடுபடும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் குரு தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். 6ம் இடத்தில் இருக்கும் புதனால் மே 27 வரை சிறப்பான பலன்  உண்டாகும். பிறகு அவர் சாதகமற்ற இடத்திற்கு மாறினாலும்,  ஜூன் 13 முதல் நிலைமை சீராகும். சுக்கிரனால்  தற்போது நன்மை ஏற்பட்டாலும்,  மே  31 க்குப் பிறகு நன்மை குறையும். சூரியன், செவ்வாய், ராகு, கேதுவால் சுமாரான பலனே கிடைக்கும். குரு பகவான் 11ம் இடத்தில்  உள்ளதால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு.  குடும்ப பெரியோர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.  மாத முற்பகுதியில் புதனால் குடும்பத்தில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக  நடந்தேறும். மே 27க்குப் பிறகு கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம்.  

ஜூன்  12க்குப் பிறகு குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். பெண்களால் ஜூன் 8,9ல் நன்மை கிடைக்க பெறலாம்.  ஜூன் 3,4ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். மே 19,20 ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். உடல்நிலை சீராக இருக்கும். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபத்திற்கு குறைவிருக்காது. தொழில் விஷயமாக அடிக்கடி பயணம் செல்ல நேரிடும். விடா முயற்சி எடுத்தே வாடிக்கையாளரைத்  தக்க வைக்க இயலும். மே 15, ஜூன் 5,6,7,10,11,12 ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே 23,24ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.  

பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் உண்டாகும் மாத பிற்பகுதியில் வேலைப்பளு குறைவதோடு, பணப்புழக்கம் அதிகரிக்கும்.  பணியாளர்கள் மாத முற்பகுதியில் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். மே 28 – ஜூன் 12, புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். ஆனால் அதன் பிறகு மேன்மை உண்டாகும்.  அதிகாரிகளின் ஆதரவு சீராக கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் விரைவில் பெறலாம். ஜூன் 1,2ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு மாத தொடக்கத்தில் விருது, பாராட்டு பத்திரம் போன்றவை கிடைக்க பெறலாம். மே 30க்குப் பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.  அரசியல்வாதிகள் தொண்டர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. மே 21,22ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆலோசனை  வளர்ச்சிக்கு துணை நிற்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். மே 28ல் இருந்து ஜூன் 12 வரை  படிப்பில் சற்று கவனம் தேவை. விவசாயிகளுக்கு  விளைச்சல் அதிகரிக்கும். பயறு வகைகள்,  காய்கறிகள் மூலம் சற்று ஆதாயம் கூடும்.   புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு விவகாரத்தில் முடிவு திருப்தியளிக்கும். மே 26 க்கு பிறகு பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். தோழிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் மே 27க்கு பிறகு கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். மே 16,17,18, ஜூன் 13,14ல்  புத்தாடை,
அணிகலன்கள் வாங்கலாம்.  பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். மே 25,26ல் சகோதரிகளால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

பரிகாரம்:
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு
* ராகு காலத்தில் துர்க்கைக்கு அர்ச்சனை
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்

நல்ல நாள்: நல்ல நாள்: மே 16, 17, 18, 23,24, 25, 26 ஜூன் 1,2,3,4,8,9,13,14
கவன நாள்: மே 27,28,29 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,3   நிறம்: மஞ்சள், வெள்ளை

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்
 
temple
மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்
 
temple
பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்
 
temple
மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.