Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை).. கெட்டிமேளம் கொட்டப் போகுது விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2).. போட்டியில் வெற்றி மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1).. ஆன்மிக சுற்றுலா செல்வீங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2017
16:47

இனிமையுடன் பேசும் தனுசு ராசி அன்பர்களே!  

இந்த மாதம் சூரியன் 6ம் இடத்திலும், கேது 3ம் இடத்திலும் இருந்து  நற்பலன் வழங்குவர். சுக்கிரன் மே 31ல் மீனத்தில் இருந்து 5ம் இடமான ÷ மஷத்திற்கு சென்றாலும் மாதம் முழுவதும் சிறப்பான பலன் கிடைக்கும்.  புதன் மே 28ல் இருந்து ஜூன் 12 வரையும்,செவ்வாய் மே 26 வரையும் நன்மை தர காத்திருக்கின்றனர். 12ல் இருக்கும் சனி, 9ல் உள்ள ராகு, 10ம் இடத்தில் இருக்கும் குரு ஆகியோரால் சுமாரான பலனே கிடைக்கும்.கேது பலத்தால் பொருளாதார வளம் சிறக்கும். மாத முற்பகுதியில் செவ்வாயால்  கையில் பெரும்பணம் புழங்கும். எடுத்த காரியத்தை கச்சிதமாக  செய்து முடிப்பீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். மே 27 க்கு பிறகு புதன் 6ம் இடத்தில் இருப்பதால் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். சமுதாயத்தில்  மதிப்பு உயரும்.  உறவினர்களிடம் கருத்துவேறுபாடு நீங்கி சுமூக நிலை ஏற்படும்.  நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் நிலை  மேம்படும். மே 30க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.  

பொருள் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு  சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். மே 15 ஜூன் 10,11,12 ல்  பெண்களால் பணம் கிடைக்கும். மே 21,22ல் அக்கம் பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம்.  ஜூன் 12க்கு பிறகு கணவன், மனைவி இடையே வாக்குவாதம் வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக கிடைக்கும். மறைமுக போட்டியாளர்களால் குறுக்கிட்ட  முட்டுக்கட்டைகள் விலகும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மாத பிற்பகுதியில் அதிக லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். மே 16,17,18 ஜூன் 8,9,13,14ல்  சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே 25,26ல் எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும்.

மே 26க்கு பிறகு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பு நிலை பெறுவர்.  கோரிக்கைகளை மே26க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறை பணியாளர்கள் மே 27க்கு பிறகு புதிய பதவி கிடைக்கப் பெறுவர். விரும்பிய இடமாற்றம் பெறலாம். மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். ஜூன் 3,4 ஆகியவை அனுகூலமான நாட்களாக அமையும். ஜூன் 12க்கு பிறகு பணியில் பொறுமையும் நிதானமும் தேவை. கலைஞர்களுக்கு   புதிய ஒப்பந்தம் கிடைக்கும் அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற வாய்ப்புண்டு. மே 23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு  மாத மத்தியில். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஜூன் 12க்கு பிறகு, புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால்  சிரத்தை எடுத்து படித்தால் சிறப்பு நிலையை அடையலாம். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூலை பெறுவர். மே 26க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். மே 19,20 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வந்து சேரும். மே 27,28,29ல் சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். மே 26 வரை
பெண் பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.  சுய தொழில் செய்து வரும் பெண்கள் அதிக லாபம் காண்பர்.

பரிகாரம்:
* தேய்பிறை சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு
* சனியன்று அனுமனுக்கு துளசி அர்ச்சனை
* ராகு காலத்தில்  பைரவருக்கு தீபம்

நல்ல நாள்: மே 15, 19, 20, 25, 26, 27, 28, 29
ஜூன் 3,4,5,6,7,10,11,12
கவன நாள்: மே 30,31 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்:  3,5,7  நிறம்: வெள்ளை, சிவப்பு

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்
 
temple
மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்
 
temple
பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்
 
temple
மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.