Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3).. எதிர்பாராத வருமானம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்).. நெஞ்சுக்கு நிம்மதி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி).. பண மழை கொட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2017
16:51

உதவும் எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

சூரியன் 3ம் இடத்தில்  இருந்து குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார்.  சுக்கிரன் மே31ல் மீனத்தில் இருந்து மேஷத்திற்கு மாறினா லும் மாதம் முழுவதும் நன்மை தருவார்.  ராசிக்கு 6ல் உள்ள ராகு, 7ல் இருக்கும் குருவால் நன்மை அதிகரிக்கும்.  செவ்வாய் மே 26 வரையும், புதன்  ஜூன் 12 க்கு பிறகும் நற்பலன் கொடுப்பர். உங்கள் ராசிக்கு 9ல் இருக்கும் சனி , 12ல் உள்ள  கேது, ஆகியோரால் சுமாரான பலனே கிடைக்கும்.  குருபகவான் 7வது இடமான கன்னியில் இருந்து  குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்வதோடு,  சுப நிகழ்ச்சியை நடத்த வழிவகுப்பார். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணமழை கொட்டும் என்பதால் கையில் பெரும்பணம் புழங்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். 

வாழ்வில் குறுக்கிடும் தடைகளை எளிதில் முறியடிப்பீர்கள்.  சுக்கிரனால் பெண்களின் மூலம் நன்மை காண்பீர்கள். மாத தொடக்கத்தில்  புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும். மே 16,17,18 ஜூன் 13,14 ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே 27,28,29ல் அவர்கள் வகையில் இருந்து பிரச்னைக்கு ஆளாகலாம்.  சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.  உடல் நிலை சீராக இருக்கும். கண் நோய், உஷ்ண வியாதியில் இருந்து விடுபடுபவர்கள். பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும்.  தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் மே 30க்கு பிறகு கிடைக்கும். வங்கி கடன் கிடைக்கப் பெற்று விரிவாக்கப்பணியில் ஈடுபடலாம். புதனால் தொழிலில் ஏற்பட்ட சிரமம் அனைத்தும்  ஜூன் 12க்கு பிறகு மறையும்.  மே 19,20,23,24ல் சந்திரனால் சிறு தடைகள்  குறுக்கிடலாம். ஜூன் 1,2ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

பாதுகாப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மே 26க்குள் கேட்டு  பெற்று கொள்ளவும். தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, மனக்கவலை முதலியன மே 27க்கு பிறகு மறையும். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். ஜூன் 12க்கு பிறகு சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். மேலதிகாரிகளின்  ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்க பெறலாம். மே15, ஜூன் 10,11,12 ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்கள் உற்சாகமாக செயல்படுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.  புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சீரான முன்னேற்றம் காணலாம். மே26 க்கு பிறகு எதிலும் விடாமுயற்சி தேவைப்படும். மே 30,31 ல் வீண் குழப்பம் ஏற்படலாம். 
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். ஜூன் 12 க்கு பிறகு  மேல்படிப்பில் விரும்பிய  பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும் அதற்கேற்ப ஆதாயமும் கிடைக்கும். ஆடு, மாடு வளர்ப்பின் மூலம் பொருளாதார
வளம் மேம்படும். மே 26 வரை புதிய சொத்து வாங்குவதற்கான யோகம் உண்டு. வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும். தொலைந்த  பொருள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  மனதில் மகிழ்ச்சி  அதிகரிக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக செயல்படுவர்.   மே 25,26 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள்  கிடைக்க பெறலாம். நகைகள் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். ஜூன் 3,4 சிறப் பான நாட்களாக அமையும்.

சகோதர வகையில் பணம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ்வில் வளர்ச்சியடைவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு அரசு  வகையில் நன்மை கிடைக்கும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.

பரிகாரம்
* ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
* சனிக்கிழமையன்று பெருமாளுக்கு அர்ச்சனை

நல்ல நாள்: மே 15, 16, 17, 18, 21, 22, 25, 26, ஜூன் 1, 2, 3, 4, 10, 11, 12, 13, 14
கவன நாள்: ஜூன் 5,6,7 சந்திராஷ்டமம்.   
அதிர்ஷ்ட எண்: 1,9  நிறம்: சிவப்பு, வெள்ளை,மஞ்சள்

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018) »
temple
மற்றவருக்கு உதாரணமாக திகழும் மேஷ ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 7-ம் இடத்தில்   அமர்ந்து ... மேலும்
 
temple
பிறரை குறை கூற விரும்பாத ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து சாதகபலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மற்றவர் நலனில் அக்கறை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு  5-ல் இருக்கும் குரு பகவானும், 11-ல் ... மேலும்
 
temple
மனித நேயமுடன் நடக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் வளர்ச்சிக்கான சூழ்நிலை ... மேலும்
 
temple
சிந்தனையால் தூயவாழ்வு நடத்தும் சிம்ம ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் அதிக நன்மை உண்டாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.