Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிந்தலவாடி கோவில் விழா: பக்தர்கள் ... ­மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மழை வேண்டி வருணஜெபம் ­மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மழை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டு வண்டிகளில் பயணம்: 300 ஆண்டு பாரம்பரியம் மறக்காத பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2017
18:11

அபிராமம்: அபிராமம் அருகே 300 ஆண்டுகளாக பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 8 நாள்கள் நடக்கும் திருவிழாவுக்காக, 8 நாள்கள் 200 கிமீ., துõரம் பக்தர்கள் பயணிக்கின்றனர்.

அபிராமம் அருகே அகத்தாரிருப்பிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் அண்ணன் கூடலிங்கம், தம்பி இருளப்பன், தங்கை காளியம்மனுடன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பஞ்சம் பிழைக்க சென்று, நற்காரியங்கள் செய்ததால் அங்கேயே தெய்வமாக பிறவி எடுத்தனர். அகத்தாரிருப்பை சேர்ந்த ராஜகுலத்தை சேர்ந்த ஆதிநாராயண கோனார் வகையறாக்களை சேர்ந்த அகத்தாரிருப்பு, நரியன்சுப்பராயபுரம், காடநகரி, முதுகுளத்துõர் அருகே செல்வநாயகபுரம், காமாட்சிபுரம், பூக்குளம், ராமநாதபுரம் அருகே கொம்பூதி, சிவகங்கை மாவட்டம் ஆரியூர், லட்சுமிபுரம் உட்பட 56 கிராமங்களை சேர்ந்தவர்கள் தெய்வமாக உருவெடுத்த அண்ணன், தம்பி, தங்கைகளை குல தெய்வமாக வழக்கமாக வணங்கி வழிபடுகின்றனர்.

அண்ணன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுப்பட்டியில் கூடமுடையர் சுவாமியாகவும், கீழராஜகுலராமனில் தம்பி எத்தீஸ்வரர் பொன் இருளப்பசாமியாகவும், தங்கை ஸ்ரீவில்லிபுத்துõர் அருகே தைலாபுரத்தில் வீரகாளியம்மனாகவும் வீற்றிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடபடும் கோயில் திருவிழாவுக்காக கமுதி அருகே அகத்தாரிருப்புக்கு முந்தைய நாள் இரவே பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்கி, மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை, 8 நாள்கள் பயணித்து, 8 நாள்கள் திருவிழாவாக சொந்தங்களுடன் 16 நாள்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து அகத்தாரிருப்பு ஹரிநாராயணன் கூறுகையில், “ 300 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது மூதாதையர்கள் பின்பற்றி வந்த இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஆதி நாராயண கோனார் வகையறாக்கள் அகத்தாரிருப்பில் முதல்நாளே வந்து தங்கி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூடமுடையர், பொன் இருளப்பசாமி, வீரமாகாளி ஆகிய தெய்வங்களை விரதம் இருந்து தரிசிக்க வருகின்றனர். எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை 8 நாள்கள் பயணிக்கின்றனர். திருத்தங்கல் அருகே கிருஷ்ணா கரை சேர்ந்து, பக்தர்கள் குழுவாக தனித்தனியாக பிரிந்து, தம்பி இருளப்பசாமி, தங்கை வீரமாகாளிக்கு 5 ஆம் நாள் இரவு கிடாவெட்டி அன்னதானம் வழங்கி, தம்பி, தங்கையை பக்தர்கள் புடைசூழ அழைத்து சென்று, அண்ணன் கூடலிங்கம் சுவாமி கோயிலுக்கு சென்று 8 வது நாள் கிடா வெட்டி விரதத்தை முறித்து, சொந்த ஊருக்கு 13 ஆம் நாள் திரும்பும் நிகழ்வு ஏற்படுகிறது. வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்டவர்கள் சரக்கு வாகனம், டிராக்டர்களில் கூடாரம் அமைத்து கோயிலுக்கு செல்வது சமீபகாலமாக உள்ளது. இருந்தபோதிலு<ம் பாரம்பரியத்தை மறக்காத பக்தர்கள் இன்னும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 400 க்கும் மேற்பட்ட வண்டிகளில் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இத்திருவிழாவால், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியூர் சொந்தங்களை சந்தித்து, 16 நாள்கள் மகிழ்ச்சியுடன் வருவது நெஞ்சை வருடுகிறது”, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
பழநி : பழநி முருகன் கோயில், அதன் உபகோயில்களில் ஜூன் 26 முதல் 29 வரை உலக நலன்வேண்டி யாக பூஜை, அன்னாபிஷேகவிழா ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த, நார்த்தாம்பூண்டி கிராமத்தில், 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple
நாமக்கல்: நாவலடி கருப்பண்ணசுவாமி கோவிலில் நடந்த கும்பாபி ?ஷக விழாவில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ... மேலும்
 
temple
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக ... மேலும்
 
temple
சிவகங்கை: சோழபுரம் அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.