ஆங்கிலத்தில் (மனிதன்) என்ற சொல் சமஸ்கிருத சொல்லான மனுஷ்யா என்பதிலிருந்து பெறப்பட்டது. மனுஷ்யாவின் மூலமான மன் என்றால், சிந்திக்க என்று பொருள். அதாவது, மனிதன் ஒரு பொருளை ஸ்தூல உருவத்தில் பார்த்தால் மட்டும் போதாது. அப்பொருளின் உண்மையான தன்மை என்ன என்பதையும் சிந்தித்து அறிய வேண்டும். உண்மையைப் பற்றிய ஞானம் வாழ்க்கையில் உண்மையான வெற்றியை அளிக்கிறது. நாம் நம் மனதை வெற்றி கொள்வதுதான் அந்த வெற்றி.