Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அளவற்ற பயன் தரும் நட்சத்திர ... வாழ்வைச் சிறப்பாக்கும் நந்தி வழிபாடு! வாழ்வைச் சிறப்பாக்கும் நந்தி ...
முதல் பக்கம் » துளிகள்
அனுமனுக்கு செந்தூரம் பூசுவது ஏன்?
எழுத்தின் அளவு:
அனுமனுக்கு செந்தூரம் பூசுவது ஏன்?

பதிவு செய்த நாள்

26 மே
2017
03:05

செந்தூரம் அனுமனுக்கு மிகப் பிடித்தமானது. அசோகவனத்தில் சீதாதேவியைத் தரிசித்த அனுமன், அவள் நெற்றிவகிட்டில் செந்தூரம் பூசியிருப்பதற்கானக் காரணத்தைக் கேட்டார். தான் செந்தூரம் இட்டுக்கொள்வதால், ஸ்ரீராமனுக்கு சகல நன்மைகளும் மங்கலங்களும் சேரும் என்று சீதை சொன்னதும், அனுமனும் தன் திருமேனி முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்ட கதையை அறிந்திருப்பீர்கள். அதேபோல், வேறொரு திருக்கதையும் உண்டு. ராவண சம்ஹாரம் முடிந்தபின் நடந்த கதை இது என்பர். சுக்ரீவனுக்கு மதியூகி மந்திாியாக இருப்பதைவிட, சதாசர்வ காலமும் ஸ்ரீராமனைப் பிரியாது அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதே அனுமனின் விருப்பம். அதன்படியே மிகுந்த மகிழ்ச்சியோடு ஸ்ரீராமனுக்குப் பணிவிடைகள் செய்து கொண் டிருந்தார். எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. முதல் நாள் பகல் பொழுது முடிந்து இரவு வந்தது. பகல்நேரப் பணியாளர்கள் யாவரும் வீடுகளுக்குத் திரும்ப, இரவுநேரப் பணியாளர்கள் வந்து தங்களது பணியைத் தொடங்கினார்கள்.

ஸ்ரீராமர், ஆஞ்சநேயரைஅழைத்து, “ஆஞ்சநேயா! நீயும் போ! இரவு நேரம் வந்துவிட்டது. உனக்காக ஒதுக்கப்பட்ட மாளிகைக்குப் போய் ஓய்வெடுத்துக் கொண்டு, நாளை காலையில் மறுபடியும் வா!” என்றார். ஆஞ்சநேயர் அதிர்ந்தார்; அவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. “ஸ்வாமி! நீங்கள் இப்படிச்சொல்வது என்ன நியாயம்? ஏன் என்னை ஒதுக்கப் பார்க்கிறீர்கள்? நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அதுதான் எனது இருப்பிடம். இரவு வந்ததும் எவ்வளவு மகிழ்ந்தேன் தெரியுமா? ராமசேவைக்குப் பகலில் இருந்த இடையூறுகள் இரவில் இருக்காது என்று எண்ணினேன். இரவு முழுவதும் உங்களின் திருவடிகளைப் பிடித்துவிட்டுக்கொண்டு, அதிலேயே ஒட்டிக்கொண்டு இருக்கலாம் என எண்ணினேன். அது நிறைவேறாமல், என்னை விரட்டுகிறீர்களே! என்ன நியாயம் இது? உங்களை விட்டுவிட்டு, நான் போய் ஓய்வெடுப்பதாவது? ஆகவே, நான் உங்களைவிட்டுப் பிரிய மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார்.

இதைக்கேட்ட ஸ்ரீராமருக்கு மனம் நெகிழ்ந்தது. ‘அனுமனுக்குத்தான் என் மீது எவ்வளவு பக்தி, எவ்வளவு பாிவு!’ என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு... “சாி ஆஞ்சநேயா! படுக்கை அறையிலும் நீ கொஞ்ச நேரம் இருக்கலாம்” என்றார். ஆஞ்சநேயருக்கு மகிழ்ச்சி! அதேநேரம், ‘கொஞ்ச நேரமாமே கொஞ்ச நேரம்! இரவு முழுவதும் கூடவே இருக்கக்கூடிய பாக்கியத்தைத் தர மாட்டார் போலிருக்கிறதே! ம்....ஹூம்!’ என்று மனதுக்குள் புலம்பவும் செய்தார். ஸ்ரீராமரோ புன்முறுவல் பூத்தபடிப் படுக்கைய றைக்குள் நுழைந்து, மஞ்சத்தில் சாய்ந்தார். அப்போதே இரவு நெடுநேரமாகிவிட்டது. அங்கே பள்ளியறையில் சீதை இல்லை. அவர், தன் மாமியாரான கௌசல்யாதேவிக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருந்தார்.அதை முடித்துவிட்டு, அப்புறந்தான் சீதை பள்ளியறைக்கு வருவாள். வயதாகிவிட்டால், சிலர் மாலை நேரத்திலேயே உறங்கப் போய்விடுவார் கள்; சிலரோ, இரவு வெகுநேரம் கடந்த பின்பே உறங்கப்போவார்கள். கௌசல்யாதேவி இரண்டாவது ரகம். அவள் வெகுநேரம் கழித்தே தூங்குவாள். அதுவரை அங்கிருந்து அவளுக்குக் கால் பிடித்துவிட்டு, அவள் உறங்கியபிறகே சீதை , ராமாிடம் திரும்புவார். ‘அப்படி சீதை வரும்வரைக்கும், ஆஞ்சநேயன் அப்பணியைச் செய்யட்டுமே’ என்றுதான், ராமரும் ஆஞ்சநேயரைக் கொஞ்ச நேரம் சூபள்ளியறையில் இருக்கலாம்’ என்று கூறினார். ஸ்ரீராமர் பள்ளியறையில் நுழைந்து மஞ்சத்தில் சாய்ந்ததும், ஆஞ்சநேயர் தனது பணியைத் தொடங்கினார். இரண்டு நாழிகைகள் கடந்தன.சீதாதேவியின் கொலுசுச் சத்தம் ஒலித்து, அவளது வருகையை அறிவித்தது. ராமர் தன்தலையைச்சற்று திருப்பி ஆஞ்சநேயரைப் பார்த்து, ‘நீ செல்லலாம்’ எனக் கண்ணசைப்பினாலேயே கூறினார்.

ஆஞ்சநேயரோ தலையை ஆட்டி மறுத்துவிட்டு, “நான் ஏன் போக வேண்டும்?”எனக்கேட்டார். “ஏனா? நன்றாகக் கேட்டாய்!” என்று ராமர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அறை வாயிலில் சீதாதேவி கையில் தீர்த்தப் பாத்திரத்துடன் நின்றார். ராமர் சீதையைப் பார்த்தார்; அதே வேகத்தில் திரும்பி ஆஞ்சநேயரையும் பார்த்தார்.  சூஆஞ்சநேயா! புாிந்துகொண்டாயா? சீதை வந்து விட்டாள். நீ போகவேண்டியது தானே’ எனச் சொல்லாமல் சொன்னது, ராமாின் பார்வை. ஆஞ்சநேயர் விடுவாரா? “அம்மா வந்தால் நான் ஏன் வெளியே போக வேண்டும்? அம்மாவுக்கு அப்படி என்ன விசேஷம்?” எனக் கேட்டார். ஸ்ரீராமரும் பொருத்தமான ஒரு பதிலைக் கூறினார். “அம்மாவின் வகிட்டில் பார்! செந்தூரக் குங்குமம் அப்பிக்கொண்டிருக்கிறாள் அல்லவா?அந்தச் செந்தூரக் குங்குமத்தால் வந்த விசேஷம்தான்” என்றார்.
பார்த்தார் ஆஞ்சநேயர்... ‘ஆஹா! செந்தூரம் தான் விசேஷம் என்றால், நாமும் செந்தூரம் பூசிக் கொண்டிருந்தால், இரவு முழுவதும் ராமச்சந்திர மூர்த்தியுடன் இருக்கலாமே... அவருக்குத் தொண்டு செய்யலாமே...’ என்று கருதியவர்,  சூசூஜெய் சீதாராம்!” என்று கம்பீரமாகக் கர்ஜித்த படியே வெளியே ஓடினார்.

அந்த இரவிலும் ஓடியாடித் தேடி, செந்தூர அங்காடி ஒன்றைக் கண்டுபிடித்தார். அது மூடப்பட்டிருந்தது. அதற்காக அனுமன் கவலைப் படவில்லை. ஒரு நொடியில் கதவை அப்படியே கழற்றி அகற்றிவிட்டு, உள்ளே நுழைந்தார்.  அங்காடிக்குள் கும்மிருட்டு. எந்தப் பொருள், எங்கே இருக்கிறது என்று தொியவில்லை.சற்று நேரத்தில் அந்த இருட்டு பழக்கப்பட்டுவிட, செந்தூரப் பெட்டிகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டார். திறந்து கொஞ்சம் எடுத்து, சீதையைப் போலவே வகிட்டில் இட்டுக் கொள்ளலாம் என அவர்  முயற்சி செய்தபோது, அடுத்த பிரச்னை முளைத்தது. சூநம் நெற்றியில் வகிடு எங்கு இருக்கிறது என எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்ற சந்தேகம் வந்தது ஆஞ்சநேயருக்கு. அதுவும் ஒரு சில விநாடிகள்தான். பிறகு, அவருக்குள் ஏதோ யோசனை எழ,  “ஹாஹ்ஹாஹ்ஹா...!”என்று ஆரவாரத்துடன் கத்தியபடியே ஒரு குதி குதித்தார் ஆஞ்சநேயர்.

சூசீதையின் வகிட்டில் உள்ள செந்தூர விசேஷத் தால்தான் அவளை எந்நேரமும், ஸ்வாமி தன்னுடன் வைத்துக்கொண்டிருக்கிறார். எனினும், மற்றொரு கோணத்தில் பார்த்தால்... சீதாதேவியும்  ராமரைப் பிரிந்து பத்து மாதங்கள் தவிக்கவேண்டி வந்ததே. ராவண சம்ஹாரம் முடிந்தபிறகும்,  ‘நீ எங்கு வேண்டுமானாலும் போய் இரு’ என்று சீதையிடம் ராமர் சொல்லும்படி ஆயிற்றே! இதற்கெல்லாம் காரணம்... சீதாதேவி, வகிட்டில் மட்டுமே செந்தூரம் இட்டுக்கொண்டிருப்பதுதான். நாம் அப்படிச் செய்யக்கூடாது. உடம்பு முழுவதும் செந்தூரத்தைப்பூசிக் கொள்வோம். அப்படிச் செய்தால்தான் எப்போதும் ராமரை விட்டுப் பிாியும் நிலை வராது’ என்று கருதிய ஆஞ்சநேயர் செந்தூரத்தை அள்ளி தன் திருமேனியில் - தலை முதல் கால் வரை அப்பிக்கொண்டு, செந்தூர  ஆஞ்சநேயராகப் போய், ராமாின் பள்ளியறை முன்னால் நின்றார். அவருடைய திருமேனியின் சிவப்பழகைப் பார்ப்பதற்காகவே வந்ததுபோல், ஆகாயமும் சிவக்கத் தொடங்கியது; விடியல் ஆரம்பித்தது!

காலை அனுஷ்டானத்துக்காக வெளியில் வந்த ராமசந்திரமூர்த்தி, ஆஞ்சநேயரைக் கண்டு, அவரது உள்ளுணர்வை அறிந்து, அப்படியே கட்டித்தழுவிக் கொண்டார்! நாமும் அனுமனுக்குச் செந்தூரம் சாத்தி வழிபடுவோம். அவரது சந்நிதியில் தரப்படும் செந்தூரத்தைப் பயபக்தியுடன் வாங்கி, ராம நாமம் சொல்லியபடி நம் நெற்றியில் இட்டுக் கொள்வோம். அதன் பிறகு, சத்ரு பயம், நோய், வறுமை முதலானவை நீங்கும்; அனுமனின் திருவருளால் நமது வாழ்வில் சந்தோஷம் மட்டுமே நிலைத்திருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar