Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்).. பொன் பொருள் சேரும் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்).. ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிரகசிரீடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3).. எதிர்பாராத வருமானம்
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிரகசிரீடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3).. எதிர்பாராத வருமானம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2017
03:06

சாமர்த்திய குணத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி, ராகு  மாதம் முழுவதும் நற்பலன் தர காத்திருக்கின்றனர். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் சிறக்கும்.  ஜூன் 28- வரை குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண் பேச்சை தவிர்க்கவும். வீண் அலைச்சல்,  சோர்வு குறுக்கிடலாம்.  செல்வாக்கு பாதிக்கப் படலாம்.குடும்பத் தேவை குறைவின்றி பூர்த்தியாகும். பணவரவு சீராக இருக்கும்.  பெண்களால் ஜூன் 24,25 -ஆகிய நாட்களில் நன்மை உண்டாகும். ஜூன் 20,21- ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே  நேரம் ஜூன் 30, ஜூலை 1,2 -ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று விலகி இருக்கவும். ஜூன்28,29- ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். உடல் நலம் லேசாக பாதிக்கப்படும். உஷ்ண வியாதிகளால் சிரமம் ஏற்படலாம். ஜூன் 15,16, ஜூலை 3, 4, 12,13,14-ல் உடல் நலனில் அக்கறை கொள்வதுநல்லது. அலைச்சலைத் தவிர்ப்பதும்
அவசியம்.

தொழில், வியாபாரத்தில் வருமானத்துக்கு குறைவிருக்காது. தொழிலாளர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு கைகொடுக்கும். சகதொழிலதிபர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். ஜூன் 28- வரை நிர்வாகச் செலவு அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை சந்திக்க வேண்டியதிருக்கும். தொழில் ரீதியான பயணம் அடிக்கடி மேற்கொள்வர். ஜூன் 22,23, 26, 27- ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

ஜூலை 5, 6, 7 -ல் எதிர்பாராத வருமானம் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும்.பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திக்க வேண்டியதிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பணியாளர்கள் திடீர் இடமாற்றத்தைச் சந்திப்பர். ஜூன் 26-க்கு பிறகு  செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். ஜூன் 17, 18, 19, ஜூலை 15, 16 ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.

கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கிடைக்கப் பெறுவர். அரசாங்கத்திடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்களின் மத்தியில்  நற்பெயர் காண்பர்.  தலைமையின் ஆதரவால் உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. பொருளாதாரம் வளர்முகமாக இருக்கும். அரசியல்ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்வர்.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. ஆனால், விடாமுயற்சிக்கு தகுந்த பலன் உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நட்பு விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின்  மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நெல், சோளம், கடலை போன்ற பயிர்களின் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
அரசாங்க வகையில் உதவி கிடைக்கப் பெறுவர்.  வழக்கு,  விவகாரத்தில் மெத்தனப் போக்கு வேண்டாம்.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வீர்கள். சுக்கிரனால் ஆடம்பர பொருள் சேரும். பணிக்குச் செல்லும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும், வருமானம் அதிகரிக்கும்.

அதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராகவே இருக்கும். சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். தொழில் புரியும் பெண்கள் சீரான வளர்ச்சி காண்பர்.

ஜூன் 28 வரை மறைமுகப் போட்டி குறுக்கிடலாம்.  ஜூலை 8, 9-ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்க பெறலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

நல்ல நாள்: ஜூன்  17, 18, 19, 20, 21, 24, 25, 28, 29
ஜூலை 5, 6, 7, 8, 9, 15, 16
கவன நாள்: ஜூலை 10, 11 சந்திராஷ்டமம்  
அதிர்ஷ்ட எண்:- 4,8  நிறம்-: நீலம், வெள்ளை

பரிகாரம்
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு விளக்கு.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar