Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1).. அரசு ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3).. பிள்ளைகளால் பெருமை துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2).. போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2).. போட்டியில் வெற்றி

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2017
03:06

மதிநுட்பத்தால் வெற்றி காணும் கன்னி ராசி அன்பர்களே!

சிறப்பான மாதமாக  அமையும். முக்கிய கிரகங்களில் 3-ல் சனி, 6ல்  கேது, 8-ல்  சுக்கிரன் ஆகியோரால் தொடர்ந்து நன்மை உண்டாகும். 10-ம் இடத்தில் இருக்கும் சூரியனால்  மாதம் முழுவதும் நன்மை ஏற்படும். புதனும் ஜூன் 28-ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு  இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மையளிப்பார்.

சுக்கிரன் ஜூலை 2- வரை கடகத்தில் இருந்து நன்மை தருவார். சூரியன் சாதகமாக காணப்படுவதால் பொருளாதாரம் சிறக்கும்.  புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். ஜூன் 28- க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் லாபம் உயரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும்.

ஜூன் 30,  ஜூலை 1,2 ல் எதிர்பாராமல் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 26, 27-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை 8,9ல் உறவினர்கள் வகையில் பிரச்னை குறுகிட வாய்ப்புண்டு. ஜூலை 12-க்கு பிறகு  புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.உடல்நிலை சீராக இருக்கும். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால்  உஷ்ணம், தோல், தொடர்பான நோய் ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை. ஜூன் 22, 23, ஜூலை 10, 11-ல் வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

தொழில், வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்க அருமையான காலகட்டமாக அமையும். ஜூன் 28, 29, ஜூலை 3, 4- ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம்.  ஜூன் 15, 16 ஜூலை 12, 13, 14 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.  தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். படித்தவர்களுக்கு  நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஜூன் 24, 25-ல் எதிர்பாராத நன்மை வந்து சேரும்.  

ஜூலை 12- க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ்,  பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் ஜூலை 13-க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காண்பர்.

மாணவர்கள் படிப்பில் மட்டுமில்லாமல் போட்டியில்  ஈடுபட்டு வெற்றி காண்பர்.

புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்புஉண்டாகும்.

விவசாயிகளுக்கு  விளைச்சல் அதிகரிப்பால் வருமானம் உயரும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
வழக்கு, விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.  ஜூலை 13- க்கு பிறகு வழக்கில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் கணவரின் அன்பை பெற்று மகிழ்வர்.  ஜூன் 17, 18, 19,  ஜூலை15, 16- சிறப்பான நாட்களாக இருக்கும். ஜூலை
5, 6 ,7-ல்  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  

ஜூலை 13-க்கு பிறகு  வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.

சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.

நல்ல நாள்: ஜூன் 15, 16, 17, 18, 19, 24, 25, 26, 27, 30 ஜூலை 1,2, 5, 6, 7, 12, 13, 14
கவன நாள்: ஜூன் 20, 21- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,5,7;  நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்
* ராகு காலத்தில் நாகதேவதை வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar