Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி).. பெண்களால் நன்மை மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம் : (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) பணமழை கொட்டும் ரிஷபம் : (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
17:12

அன்பு மனம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்களுக்கு கேதுவால் நன்மை ஏற்படும். சுக்கிரன் ஜூலை 26-ல் மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார்.  உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கும் புதன், ஜூலை 21-ல் சிம்மத்திற்கும்,  அதன் பின் ஆகஸ்ட் 6-ல் வக்கிரம் அடைந்து  கடகத்திற்கும் மாறுகிறார். அவரால் மாத தொடக்கத்திலும், வக்கிரம் அடைவதால் மாத இறுதியிலும் நன்மை உண்டாகும்.  குடும்ப வாழ்வு சிறக்கும். ஜூலை 21- முதல் ஆகஸ்ட் 6- வரை வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ராகு ஜூலை2ல் 4-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் வீண் அலைச்சல், மனப்பிரச்னை உருவாகலாம். மனைவி, பிள்ளைகளின் மத்தியில் குழப்பம் ஏற்படலாம். கேது இதுவரை  ராசிக்கு 11-ம் இடமான கும்பத்தில் இருந்து  நன்மை தந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக அவரால் பொருளாதார வளம் ஏற்பட்டிருக்கும். அவர் ஜூலை 27ல் 10-ம் இடமான  மகரத்திற்கு செல்வதால் நோய்நொடி உருவாகலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். புதிய முயற்சியில் வெற்றி காணலாம். ஜூலை 27க்கு பிறகு கணவன், மனைவி  இடையே அன்பு பெருகும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். ஜூலை 17, 18, ஆக. 13, 14ல் பெண்கள்  உதவிகரமாக செயல்படுவர்.

அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. எனவே, அனாவசிய பேச்சை தவிர்ப்பது அவசியம். ஆக. 9, 10-ல் உறவினர்  வருகையும், அவர்களால் நன்மையும் உண்டாகும். உடல்நிலை சுமாராக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் லாபம் சேரும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வங்கியில் விண்ணப்பித்த கடன் எளிதாக கிடைக்கும். செவ்வாயால் சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம்.  ஜூலை 21- முதல் ஆகஸ்ட் 6- வரை அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஜூலை 19,20, ஆகஸ்ட் 11,12,15,16- ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். ஜூலை 28,29 ல் எதிர்பாராத வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

பணியாளர்களக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். அரசு ஊழியர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சகபெண் ஊழியர்களிடம் விரோதம் ஏற்படலாம்.  கவனம் தேவை.  ஜூலை 21- முதல் ஆகஸ்ட் 6- வரை சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை உருவாகலாம். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. ஆகஸ்ட் 6,7,8- ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காண்பர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வாழ்வில் மேன்மை அடைவர். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு.

மாணவர்கள் சிறப்பான நிலையை காணலாம். ஜூலை 20- வரையும். ஆக.5க்குப் பிறகும் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். படிப்புக்குஏற்ப நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

விவசாயிகளுக்கு  விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில்  எதிர்பார்த்த  ஆதாயம் கிடைக்கும்.

பெண்கள் வாழ்வில்  குதூகல நிலை காண்பர். உங்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். தோழிகள் ஆதரவுடன் இருப்பர். அக்கம்பக்கத்தினர் தொல்லை மறையும். ஜூலை 30,31-
ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.

நல்ல நாள்: ஜூலை 17, 18, 21, 22, 28, 29, 30, 31, ஆக. 6, 7, 8, 9, 10, 13, 14
கவன நாள்: ஆகஸ்ட் 1,2,3- ல் சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7   நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்
*  ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு.
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்.
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்.

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018) »
temple
மற்றவருக்கு உதாரணமாக திகழும் மேஷ ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 7-ம் இடத்தில்   அமர்ந்து ... மேலும்
 
temple
பிறரை குறை கூற விரும்பாத ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து சாதகபலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மற்றவர் நலனில் அக்கறை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு  5-ல் இருக்கும் குரு பகவானும், 11-ல் ... மேலும்
 
temple
மனித நேயமுடன் நடக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் வளர்ச்சிக்கான சூழ்நிலை ... மேலும்
 
temple
சிந்தனையால் தூயவாழ்வு நடத்தும் சிம்ம ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் அதிக நன்மை உண்டாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.