Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ரிஷபம் : (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) பணமழை கொட்டும் ரிஷபம் : (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) திடீர் பணவரவு கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (14.01.2018 - 12.2.2018)
மிதுனம் : (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) அபார ஆற்றல் பெருகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
17:15

உழைப்பில் ஆர்வமிக்க மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஜூலை 26-ல், 12-ம் இடத்தில் இருந்து  உங்கள் ராசிக்கு வந்து  நன்மை தருவார். புதன் ஜூலை 21-ல்  சிம்மத்திற்கு மாறுகிறார். பின் ஆக., 6-ல் வக்கிரம் அடைந்து கடகத்திற்கு மாறுகிறார். அவரால் நன்மை தர இயலாது. சூரியன், செவ்வாய்,  குருவாலும் பலனை எதிர்பார்க்க முடியாது.  சனி பகவான் தரும் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

ராகு ஜூலை 26 வரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சிம்மத்தில் இருந்து செயல் வெற்றி, கால்நடைகள் வகையில் நல்ல வருவாய் என நற்பலன் தருவார்.  அதன் பிறகு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். கேது 9-ம் இடமான கும்பத்தில் இருந்து பொருள் இழப்பையும், செயல்களில் தோல்வியையும் தந்துகொண்டிருக்கிறார்.

அவர் ஜூலை 27ல் தேதி  8-ம் இடமான மகரத்திற்கு மாறுவதன் மூலம் இந்த கெடுபலன்கள் நடக்காது. அதேநேரம் அவர் கும்பத்திற்கு மாறுவதும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அங்கு அவரால் சிற்சில உடல் உபாதைகள் வரலாம்.

சனிபகவானால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.  எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.

பொருளாதார வளம் மேம்படும். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். செலவு அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. ஆனால்  சுக்கிரனால்  ஜூலை 26-ல் இருந்து மனதில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிலவும். பணவரவு இருக்கும்.

பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் ஜூலை 20-க்கு பிறகு பெண்களால் பொருள் சேரும். விருந்து, விழா என உல்லாசமாக கழியும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும்.  பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக ஜூலை 21,22-ல் அவர்களால் அதிக அனுகூலத்தை பெறலாம். ஜூலை 28,29-ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். அதே நேரம் ஜூலை 17,18ஆக., 13,14-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு மந்த நிலை ஆட்டிப்படைக்கும். சோம்பலை விடுவித்து சுறுசுறுப்புடன் செயலாற்றினால் தகுந்த முன்னேற்றம் காணலாம். அவ்வப்போது சறுக்கு ஏற்படலாம். அதே நேரம் சனி சாதகமான இடத்தில் இருப்பதால் அதை சாதுரியமாக முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். ஜூலை 21- முதல் ஆக., 6- வரை அரசு வகையில்  பிரச்னை வரலாம் எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்  இந்த நாட்களில் போட்டியாளர்களின் இடையூறை சந்திக்க வேண்டியிருக்கும். ஜூலை 25-க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். கோரிக்கைகள் அதிக முயற்சியின் பேரில் நிறைவேறும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, கவலை முதலியன ஜூலை 20-க்கு பிறகு மறையும். இருப்பினும் வேலையில் அதிக
அக்கறையுடன் இருக்கவும்.

கலைஞர்கள் ஜூலை 25-க்கு பிறகு முன்னேற்ற பாதையில் செல்வர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  அரசியல்வாதிகள் பதவியை எதிர் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். அதே நேரம் பணப் புழக்கத்திற்கு குறை இருக்காது.

மாணவர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.  புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. கடும் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு பயறு வகை, காய்கறிகள் நல்ல மகசூலை தரலாம். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரங்கள் சுமாராக அமையும்.

பெண்களுக்கு குடும்பம் சிறந்து விளங்கும். குரு பகவான் மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். பொறுமையாகவும், விட்டுகொடுத்தும் போகவும். சுக்கிரனால் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் பல்வேறு விஷயங்களில் பெருமையாக பேசப்படுவர். ஆக. 4, 5-ல் விருந்து விழா என சென்று வருவீர்கள்.

சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். ஜூலை 25,26,27-ல் புத்தாடை, நகை வாங்கலாம்.
நல்ல நாள்:  ஜூலை17, 18, 21, 22, 25, 26, 27 ஆக., 1, 2, 3, 4, 5, 11, 12, 13, 14.
கவன நாள்: ஆக. 6,7,8- சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 4,7  நிறம்: கருப்பு, நீலம்

பரிகாரம்
* குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்துதல்.  
* செவ்வாயன்று நரசிம்மர் வழிபாடு.
* தினமும் காலையில் சூரிய தரிசனம்.

 
மேலும் தை ராசி பலன் (14.01.2018 - 12.2.2018) »
temple
உதவும் குணமுள்ள மேஷ ராசி அன்பர்களே!

சூரியன் 10-ம் இடத்திற்கு வந்தும், குரு மாதம் முழுவதும், புதன் ... மேலும்
 
temple
வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து மாதம் முழுவதும் ... மேலும்
 
temple
பிறர் நன்மையை பெரிதென எண்ணும் மிதுன ராசி அன்பர்களே!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ... மேலும்
 
temple
நேசமும் பாசமும் மிக்க கடக ராசி அன்பர்களே!

அதிக உழைப்பையும் விடா முயற்சியையும் கொடுக்க வேண்டிய ... மேலும்
 
temple
கண்ணசைவில் காரியம் சாதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன் மற்றும்  கேது தரும் சிறப்பான பலனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.