Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) போட்டியில் வெற்றி சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) கை நிறைய வருமானம் துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) வளமான வாழ்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
17:22

கடமை உணர்வு மிக்க கன்னி ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் தரும் மாதமாக அமையும். உங்கள் ராசிக்கு 3-ல் உள்ள சனி, 11-ல் இணைந்திருக்கும் சூரியன், புதன், செவ்வாய்  ஆகியோர் வளமான வாழ்வைக் கொடுப்பார்கள். சுக்கிரன் ஜூலை 26-ல், மிதுனத்திற்கு வந்து நன்மை தருவார். புதன் ஜூலை 21-ல், கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு வருவதால் அவரால் முன்போல் நன்மை செய்ய முடியாது.    ஆனால் அவர் ஆக., 6-ல் வக்கிரம் அடைந்து, கடகத்திற்கு வருவதால்  நன்மை தருவார்.

ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான சிம்ம  ராசியில் இருந்ததால் பண இழப்பையும், சில விரும்பத்தகாத சம்பவங்களையும் சந்தித்து இருக்கலாம். முயற்சிகளில் தடை ஏற்பட்டு இருக்கும். ஜூலை 27ல், ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கடகத்திற்கு செல்வது மிகச்சிறப்பான இடம் ஆகும். அவரால் இதுவரை இருந்து வந்த பிரச்னை இனி இருக்காது.

பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். கேது இதுவரை 6-ம் இடமான கும்பத்தில் இருந்து பொன்னையும், பொருளையும் தந்தார். அவர் ஜூலை 26-ல், 5-ம் இடமான மகரத்திற்கு வருகிறார். இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்னைகளைத் தரலாம். பொருட்களைக் கவனமாக வைத்துக் கொள்ளவும்.

பக்தி உயர்வு மேம்படும். நல்ல பணப்புழக்கம் இருக்கும்.  இந்த மாதம் கையில் இருப்பதை நிரந்தர சேமிப்பில் முதலீடு செய்வது நல்லது. எடுத்த செயல்கள் சிறப்பாக நிறைவேறும்.  அபார ஆற்றல் பிறக்கும். மதிப்பு,  மரியாதை மேம்படும். செல்வாக்கு அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.   திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். வீடு, -மனை வாங்க யோகம் கூடி வரும். பெண்களின் ஆதரவு இருக்கும். ஜூலை 28,29-ல் பெண்கள் வகையில் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 23, 24ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக. 4, 5-ல் அவர்கள் வகையில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது.  ஒதுங்கி இருக்கவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல லாபத்தோடும், செழிப்போடும் காணப்படுவர். சிலர் நிறுவனத்தை விரிவுபடுத்துவர். சிலர் ஆடிப்பெருக்கன்று புதிய தொழில்களைத் துவங்குவர். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்க நல்ல நாளாகவும் ஆடிப்பெருக்கு அமையும். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். பகைவர்களின் இடையூறுகள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். ஆக. 9, 10-ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். சிலருக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்கலாம். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஜூலை 21, 22ல் எதிர்பாராத சிறப்பான பலன் கிடைக்கும்.  ஜூலை 21- முதல் ஆக. 5- வரை அதிக வேலைப்பளு இருக்கும். அதே நேரம்  உழைப்புக்கு ஏற்ற பலனை காணலாம்.

கலைஞர்கள் முன்னேற்றமான பலனை காணலாம். நல்ல வருமானம், புகழ், பாராட்டு, விருது கிடைக்கும். சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.  

அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பர். பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர்.

விவசாயிகளுக்கு செலவு குறையும். வருமானம் அதிகரிக்கும். கரும்பு, நெல், சோளம், காய்கறி, பழ வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடைகள்,  புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு.

பெண்களுக்கு சகோதரிகளால் பொருள் சேரும். கணவரின் அன்பு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பங்கு  வர்த்தகம் நல்ல லாபம் தரும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். ஆக., 11,12- சிறப்பான நாட்களாக இருக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக., 1,2,3-ல் புத்தாடை, நகை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். உடல்நலம் சீராக இருக்கும்.

நல்ல நாள்: ஜூலை 21, 22, 23, 24, 28, 29, ஆக. 1, 2, 3, 9, 10, 11, 12.
கவன நாள்: ஜூலை 17,18 ஆக. 13,14- சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,7,9  நிறம்: நீலம், சிவப்பு

பரிகாரம்
* புதன்கிழமை பெருமாளுக்கு பூஜை.
* வியாழக்கிழமை குருவுக்கு அர்ச்சனை.
* வெள்ளியன்று விநாயகர் வழிபாடு.

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்
 
temple
மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்
 
temple
பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்
 
temple
மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.