Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்பாராத நன்மை விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) கை நிறைய வருமானம்
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) கை நிறைய வருமானம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
05:07

நியாயமாக நடக்கும் துலாம் ராசி அன்பர்களே!

வாழ்வில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும் காலகட்டமாக அமையும். சுக்கிரனும், ராகுவும் நன்மையை வாரி வழங்குவர். சூரியன் மாதம் முழுவதும் நற்பலன் தர காத்திருக்கிறார். புதன் ஜூலை 21- முதல்  சிம்மத்திற்கு வந்தும், அதன் பின் ஆக. 6-ல் வக்கிரம் அடைந்து கடகத்திற்கு சென்றாலும் நன்மை அளிப்பார்.

ராகு இது வரை 11-ம் இடமான சிம்ம ராசியில் இருந்து பொருளாதார வளத்தையும், பெண்களால் அனுகூலத்தையும் கொடுத்தார். அவர் ஜூலை 27ல் 10-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். இங்கு அவர் பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுப்பார். கேது இதுவரை 5-ம் இடமான கும்ப ராசியில் இருந்து உடல் பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்னையையும் ஏற்படுத்தி இருக்கலாம். இப்போது கேது 4-ம் இடமான மகரத்திற்கு வந்தாலும் உடல் நலக்குறைவு தொடரவே செய்யும்.

சூரியனால் நினைத்தது விரைவில் நிறைவேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்திஆகும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

குடும்பத்தில் வசதி, வாய்ப்பு பெருகும். மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.  சகோதரிகளின் ஆதரவால் நன்மை காண்பீர்கள். பொன், பொருள் சேரும். கணவன், -மனைவி இடையே அன்பு மேம்படும்.  பெண்கள்  உதவிகரமாக இருப்பர். குறிப்பாக ஜூலை 30,31- ல் அவர்களால் நன்மை அதிகரிக்கும்.  

ஜூலை 25,26,27-ல் உறவினர்களின் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆகஸ்ட் 6, 7, 8-ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.  பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் சனி சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். சூரியன், புதனால்   எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.

பகைவர்களின் இடையூறுகளை சாதுர்யமாக  உடைத்தெறிவீர்கள். ஆக.11,12 ல் அதிர்ஷ்டவசமாக வருமானம் வர வாய்ப்புண்டு.  ஜூலை 28,29, ஆக. 1,2, 3- ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூலை 21- முதல் ஆக. 5- வரை  தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  

பணியாளர்களுக்கு புதன் சாதகமான நிலையில் இருப்பதால் கோரிக்கை விரைவில் நிறைவேறும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  தனியார் துறை பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும். சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.  ஜூலை 23,24ல் நிர்வாகத்தின் பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. கலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெழுத்தாகும். வருமான உயர்வால் சேமிப்பு கூடும்.  எதிர்பார்த்த பரிசு,  பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆக. 9,10- ல் மனக்குழப்பம் ஏற்படலாம். ஜூலை 25-க்கு  பிறகு சற்று கவனம் தேவை. மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் கல்வி  முன்னேற்றம் உண்டாகும்.   போட்டிகளில் அடிக்கடி பங்கேற்று வெற்றி காண்பர்.  ஆசிரியர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும்  கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் முன்னேற்ற பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.

சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூலை 17,18, ஆக.13,14 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். உறவினர்களுடன் விருந்து, விழா என சென்று வருவர். ஆக. 4,5-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.  
செவ்வாயால் அக்கம் பக்கத்தினரால் தொல்லை ஏற்படலாம். பெற்றோர் வீட்டில்
சீதனப் பொருள் வரப் பெறலாம்.

நல்ல நாள்: ஜூலை17, 18, 23, 24, 25, 26, 27, 30, 31, ஆக. 4, 5, 11, 12, 13, 14
கவன நாள்: ஜூலை 19,20, ஆக.15,16 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7  
நிறம்: சிவப்பு, வெள்ளை, கருநீலம்

பரிகாரம்
* நவக்கிரகங்களில் கேது, சனிக்கு அர்ச்சனை.
* சனிக்கிழமையில் பெருமாளுக்கு தீபம்.
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar