Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் மகிழ்ச்சி தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்பாராத நன்மை
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்பாராத நன்மை

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
05:07

விரைந்து பணியாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் குரு பகவானால்  மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். புதன் ஜூலை  21- முதல் ஆகஸ்ட் 5- வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுவதால் நன்மை குறையும்.  சுக்கிரன் ஜூலை   26-ல்   மிதுனத்திற்கு வருவதால் பணபலம் பெருகும். ஆடம்பர வசதி அதிகரிக்கும்.  சனி, செவ்வாய், சூரியன் ஆகியோரால் சுமாரான பலனே கிடைக்கும்.10-ம் இடமான சிம்ம  ராசியில் இருக்கும் ராகு,  மனைவி வகையில் பிரச்னை கொடுத்திருப்பார்.

அவர் ஜூலை 27ல் 9-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் வாழ்வில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். 4-ம் வீடான கும்பத்தில் உள்ள கேது,   உடல் உபாதை, பிள்ளைகளால் தொல்லை உருவாக்கியிருக்கலாம். இந்த பிரச்னைக்கு  விடை கொடுக்கும் காலம் நெருங்கி விட்டது. கேது ஜூலை 27ல்  3-ம் இடமான மகரத்திற்கு வருவதால் நன்மை மேலோங்கும். இறை அருள் வாழ்வில் நிறைந்திருக்கும். பொன், பொருள் சேரும். உடல் உபாதை நீங்கி பூரண குணம் உண்டாகும். பணப்புழக்கத்தில் குறைவிருக்காது. அத்தியாவசிய தேவை பூர்த்தியாகும். புதன் ஜூலை 21-ல் சிம்மத்திற்கு மாறி குடும்ப மேம்பாட்டிற்கான சூழலை உருவாக்குவார். ஆனால் ஜூலை 20- வரையும், ஆக. 5க்கு பிறகும் புதனால் அவப்பெயர் வர வாய்ப்புண்டு. எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் விட்டுக் கொடுத்து போகவும்.

குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். ஜூலை 25-க்கு பிறகு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும்.  ஜூலை 21- முதல் ஆகஸ்ட் 5- வரை பெண்களின் ஆதரவு கிடைக்கும்.  ஜூலை 28,29 ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆகஸ்ட் 9,10-ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று  ஒதுங்கி இருக்கவும். ஆகஸ்ட் 6,7,8ல்  புத்தாடை, நகைகள் வாங்கலாம். செவ்வாயால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த  அனுகூலமற்ற போக்கு மறையும். ராகுவால் ஏற்பட்ட  இடர்ப்பாடுகள் ஜூலை 25-க்கு பிறகு விலகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஜூலை 30,31, ஆக. 4,5-ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஜூலை 17,18, ஆகஸ்ட் 13,14-ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியாளர்கள் மாத மத்தியில் சிறப்பான நிலையில் இருப்பர். வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த பணிமாற்றம் கிடைக்கும். குறிப்பாக ஜூலை 25-க்கு பிறகு சக ஊழியர்கள்  ஆதரவுடன் இருப்பர். திறமைக்கு அங்கீகாரமும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். ஆகஸ்ட் 5- க்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். ஜூலை 25, 26, 27-ல் நன்மை உண்டாகும். கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த தொல்லை ஜூலை 25-க்கு பிறகு மறையும். அதன் பின் அவர்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக இருப்பர். புதிய
ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். ஜூலை 25-க்கு பிறகு புதிய பதவி தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

மாணவர்களுக்கு  ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.  மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஜூலை  20- வரையும், ஆகஸ்ட் 5-க்கு பிறகும் நண்பர்களின் விஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும்.  ஜூலை 25-க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனியும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் மாதத் தொடக்கத்தில் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஜூலை 25-க்கு பிறகு சகோதர வழியில் உதவி கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூலை 19,20, ஆகஸ்ட் 15,16ல் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள்.

நல்ல நாள்: ஜூலை17,18,19,20,25,26,27,28,ஆக.1, 2,3,6,7,8,13,14,15,16
கவன நாள்: ஜூலை 21,22- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:  2,3   நிறம்: மஞ்சள், நீலம்

பரிகாரம்

* வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை.
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்.
* சுவாதியன்று நரசிம்மருக்கு நெய்தீபம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar